உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் 17

களையுங் கண்டு கேட்டுச் சுவைத்து உயிர்த்துத் தொட்டு உணர்தலாலும், அறிவால் மிக்க சான்றோரொடு பழகி அவர் ஆக்கிய நூல்களை ஆராய்ந்து அறிதலாலும் யாம் நாளுக்கு நாள் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து அவற்றால் மேன்மேல் உயர்ந்து வருகின்றனம் அல்லமோ? ஆகவே, இறைவன் இவ்வுலக வாழ்க்கையினை வகுத்தது, நாம் அறிவில் வளர்ந்து அவனது பேரின்பத்தில் சென்று நிலைபெறுதற் பொருட்டேயா மென்பது நன்கு துணியப்படும்.

நாம் கடவுளின் பேரறிவினையும் பேரின்பத்தினையும் அறிதற்குக் கருவிகளாகவே அறிவையும் இன்பத்தினையுஞ் சிறிது சிறிதே காட்டும் இவ்வுலகத்துப் பொருள்களையும் இவ்வுடம்புகளையும் இறைவன் அமைத்தனனே யல்லாமல், ப்பொருள்களும் உடம்புகளுமே பேரறிவையும் பேரின்பத்தையும் அளிக்குமென அமைத்தானல்லன். ஆதலால், சிற்றறிவு சிற்றின்பங்களைத் தரும் இவற்றிற் பற்று வையாமற், பேரறிவு பேரின்பங்களைத் தருங் கடவுளிடத்தில் நாம் பற்று வைத்தல் வேண்டுமென்றே அவனது அரும்பெரு நோக்க மாதலால், அந்நோக்கத்தை யுணர்ந்தவர்களல்லால் மற்றையோர் இவ்வுலகப் பற்றை விடார்.

ஆகவே, இறைவனைச் சார்ந்து வணங்கி அவன்றன் பேரின்பத்தை நாம் பெறுவது அவனது நோக்கத்தோடு ஒத்திருத்தலால், அதுகண்டு இறைவன் திருவுளம் மகிழ்வன். மகன் உயர்ந்த நிலையடைதல் கண்டு மகிழாத தந்தையாரும் உளரோ? எனவே, நாம் இறைவனை வணங்குவது நமக்குப் பெரும் பயன் தருதலோடு, இறைவற்கும் L மகிழ்ச்சி தருவதாகலின், அவற்குத் திருக்கோயில்களும் திருவிழாக்களும் அமைத்து வணங்குதலே சிறந்த முறையாமென்க. இஃது உணர்த்துதற்கே அப்பரும்,

66

"குறிக ளும்அடை யாளமும் கோயிலும்

நெறிக ளும்அவன் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்

பொறியிலீர்மனம் என்கொல் புகாததே”

என்று அருளிச் செய்தாரென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/37&oldid=1584237" இலிருந்து மீள்விக்கப்பட்டது