உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

66

2. சைவசமயப் பாதுகாப்பு

காகம் உறவு கலந்துண்ணக்

கண்டீர்! அகண்டாகாரசிவ, போகம்எனும் பேரின்பவெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய்,

ஏகஉருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம் இனிஎடுத்த, தேகம் விழும்முன் புசிப்பதற்குச் சேரவாரும்! செகத்தீரே!”

தாயுமானசுவாமிகள்.

'சைவசமயம்' என்பது 'சிவத்தை ஆராய்ந்து அறிந்த பொழுது அல்லது கொள்கை' என்று பொருள்படும்; இந்தக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்ளுதலே சைவ சமயப் பாதுகாப்பு ஆகும். உலகத்திலே அளவிறந்த கொள்கைகள் இருந்தாலும், அவை யெல்லாவற்றுள்ளுங் கடவுளைப் பற்றிய காள்கையே சமயம் என்று பெரும்பான்மையும் எல்லாராலுங் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் நிலையில்லாத வாழ்க்கை உடையவராய் இருத்தலாலும், நோயுந்துன்பமுங் கவலையும் அடுத்தடுத்து வந்து அவரை வருத்துதலாலுந், தமக்குத் துணையாக நினைத்த மக்களுந் தம்மைப் போலவே நோய் முதலியவற்றால் வருந்தி நிலையின்றி மறைந்து போதலாலும், அவர்கள் தம்மினுந் தம்மைப் போன்ற எல்லா உயிர்களினும் மேற்பட்டு உயர்ந்த ஒரு பேரறிவுப் பொருளான கடவுளின் துணையை நாடினவராய் இருக்கின்றார்கள்.

கடவுள் இல்லையென்று வலியுறுத்திப் பேசி வந்தவர் களுங் கூடப் பெருந்துன்பங்கள் வந்து தம்மை மூடிக்கொண்ட காலத்தில் தாம்கொண்ட கொள்கையைப் பிசகென உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/38&oldid=1584238" இலிருந்து மீள்விக்கப்பட்டது