உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் -17

தலைசிறந்து நிற்கின்றார்கள். சீவகாருணிய ஒழுக்கம் மற்றைச் சமயத்தவராலுங் கைக்கொள்ளப்படினும், அது சைவசமயி களுக்கே பழமைக்காலந் தொட்டுச் சிறந்த உரிமையாகி வருகின்றது. மற்றைச் சமயத்தவருந் தம்மிற் புலால் தின்னாத ஒருவரைப் பார்த்து ‘அவர் சைவராகிவிட்டார்' என்று சைவப்பெயராற் கூறுதலிற், சீவகாருணிய வொழுக்கஞ் சைவசமயிகளுக்கே சிறப்புரிமைப் பொருளாய் விளங்குகின்றது.

இனி, இங்ஙனமெல்லாம் பலவகையாலும் உயர்ந்த சைவ சமயத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் என்னென்றாற், சைவசமயத்திற் பிறக்கும் பெருந்தவம் பெற்றவர்கள் முதலில் தம்மால் வணங்கப்பட்டுவரும் முழுமுதற் கடவுளான சிவத்தின் இயல்புகளை அறிந்தோரிடத்தும் நூல்களிடத்துங் கேட்டும் பயின்றும் நன்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும். பெண் பாலாரே பிள்ளைகளின் நல்லறிவு வளர்ச்சிக்கும் நல்லொழுக்கத் திற்குங் காரணராக இருத்தலாற், பெண்மக்களுக்குச் சைவசமய நூல்களையும் நல் நல்லொழுக்கங் களையும் அறிந்தோர் வாயிலாகக் கற்பித்து வருதல் வேண்டும். ஆண்பிள்ளைகள் மற்றக் கல்வி யொடு சைவசமய உணர்ச்சியும் பெற்றுவரும்படி கல்விச் சாலைகள் ஆங்காங்கு திறப்பித்து, அதனைச் செவ்வை யாகப் புகட்டி வருதல் வேண்டும். தேவார திருவாசகங்களுக்குப் பொருள் தெரிந்துகொள்வதோடு, இனிய குரலில் அவற்றை இசையுடன் ஓதுதற்கும் ஒவ்வொருவரும் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, ஓர் உயிரைக் கொலைசெய்யாமையுங், கொன்று அ அதன் ஊனைத் தின்னாமையுஞ் சைவசமயத்திற்குச் சிறந்த அறமா யிருத்தலால், எல்லாருஞ் சீவகாருணிய வொழுக்கத்தைக் கைப்பற்றி யொழுகும்படி எவ்வெவ்வகையால் முயற்சி செய்தல் வேண்டுமோ அவ்வவ் வகையாலெல்லாஞ் செய்து அதனை எங்கும் பரவச் செய்தல் சைவர்க்கு இன்றியமையாத கடமையா யிருக்கின்றது.

இனித், தமிழ்மொழியின் அமைப்பும் அதன் இயற்கையுஞ் சைவசமய உண்மையோடு மிகவும் ஒன்றுபட்டிருத்தலால், அதனை எல்லாரும் நன்றாகக் கற்று வேறுமொழிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/41&oldid=1584241" இலிருந்து மீள்விக்கப்பட்டது