உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

17

கலப்பில்லாமற் செவ்வையாகப் பேசவும் எழுதவும் அதிற் புதிய புதிய நல்லநூல்கள் இயற்றவும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் அல்லாத மற்றமொழிகளில், வருத்தப்பட்டுச் சொல்லுஞ் சொற்களுஞ், சினந்துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும், இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவையெல்லாஞ் செயற்கை மொழிகளென்றுந், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்குஞ் சொற்களே நிறைந்து சினத்தாற் பிறக்கும் வெடுவெடுப் போசையுந் துன்பத்தாற் பிறக்கும் ளைப்பொலியும் இன்றி, எல்லாம் இனிய குணத்திற் பிறக்கும் மெல்லோசைகளாய் இருத்தலின், தமிழ் இன்பவடிவாய் விளங்குஞ் சிவத்தோடு ஒத்த இன்பம் வாய்ந்த தெய்வ மொழியாம் என்றுஞ் சைவசமயிகள் வ்வுண்மையைக் கருத்திற் பதியவைத்து அதனை வளரச் செய்தற்கான எல்லா முயற்சிகளையுங் குறைவறச் செய்தல் வேண்டும்.

நம் செந்தமிழ் மக்களில் நூறாயிரம்பேர்க்கு இரண்டு மூன்று பேரே சிறிது கற்றவர்களா யிருக்கின்றார்கள்; மற்றவர்கள் எல்லாருங் கல்வியறிவு இல்லாதவர்களாயும், அறியாமைச் சேற்றிற் புதைந்து கிடப்பவர்களாயும் இருக்கின் றார்கள். உலகத்தில் இவ்விந்திய நாட்டைத் தவிர மற்றைப் பெரும்பாகங்களில் இருப்பவர்களெல்லாருங் கல்வியிலும் மெய்யுணர்விலும் உழவிலுங் கைத்தொழிலிலும் வாணிகத் திலும் நாளுக்குநாள் மேம்பட்டுவர, நமது நாட்டிலுள்ளவர் களோ - அவர்களிலுந் தமிழர்கள், இவற்றில் மிகவுந் தாழ்ந்த நிலைமையி லிருக்கின்றார்கள்! இவர்களை இனிக்கல்விச் சாலைகளுக்கு அனுப்பிக் கல்வி கற்பித்தல் இயலாதாகலின், ஊர்கள்தோறும் நகரங்கள் தோறுங் கழகங்கள்வைப்பித்து அவற்றின் வாயிலாகத் தமிழுஞ் சைவமும் உணர்ந்த அறிஞரைப் பல இடங்கட்கும் அனுப்பித், தமிழ்நூற் பொருள்களையுஞ் சைவ நூற்பொருள் களையும் விளக்கமாக அறிவுறுத்திவருதல் இப்போது உடனே செயற்பாலதான நன்முயற்சியாகும். தமிழ் கற்றோர் தொகை மிகவுஞ் சுருங்கிப்போதலால், 'தமிழ் அறிஞர்க்குப் பொருள் ஏன் வேண்டும்? என்று ஏளனமாய் உரையாமல், அவர்க்கு ஏராளமாய்ப் பொருளுதவி செய்து, கல்வியில் எல்லையின்றிக் கற்று அதனைப் பிறர்க்கும் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/42&oldid=1584242" இலிருந்து மீள்விக்கப்பட்டது