உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

4. சிறுதேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா?

“எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே

- தாயுமான சுவாமி

கல்வியறிவும் நல்லோர் சேர்க்கையும் இரக்கமான நெஞ்சமும் இல்லாமையால், நிரம்பவுந் தாழ்ந்த நிலைமை யிலுள்ள மாந்தர்கள் தாம் தாம் தமது குலதெய்வமாகக் கும்பிட்டு வருங் காளி, பிடாரி, மாரி, குரங்கணி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரை வீரன் முதலான சிறுதெய்வங்களுக்கு அளவிறந்த ஆடு, கோழி, எருமை முதலான குற்றமற்ற உயிர்களை வெட்டிப் பலி இடுகின்றார்கள்.

தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் பலரும் இங்ஙனஞ் செய்து வருதலைப் பார்த்துப், 'பன்றியொடு கூடிய கன்றுஞ் செயல் மாறுபட்ட பான்மைபோற் சைவ வேளாளர் சிலரும் பார்ப்பனர் சிலரும் இச்சிறு தெய்வங்களை வணங்கப் புகுந்து இவர்களும் மேற்சொன்ன ஏழை உயிர்களின் கழுத்தை அறுத்து அவற்றைப் பலி ஊட்டுகின்றார்கள்.

உயிர்க்கொலையாகிய புலைத் தொழிலைச் செய்யுந் தாழ்ந்த வகுப்பாரைப் போலவே உயர்ந்த வகுப்பாருஞ் செய்யத் தலைப்பட்டால் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் இவர் என்று எங்ஙனம் பகுத்துச் சொல்லக் கூடும்? உயர்ந்தோருந் தாழ்ந் தோராய் மாற உலகம் எங்குந் தீவினையாகிய இருள் அன்றோ பரவும்! மக்களிற் பலர் தாழ்ந்தோர் ஆனதும் சிலர் உயர்ந்தோர் ஆனதும் அவரவர் இயற்கையினாலுஞ் செய்கையினாலும் அறிவினாலுமே என்பது எல்லார்க்கும் எல்லா நூலுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/52&oldid=1584255" இலிருந்து மீள்விக்கப்பட்டது