உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் -17

உடன்பாடாம். தெய்வத்தன்மை வாய்ந்த திருவள்ளுவரும் இதனாலன்றோ,

“பார்ப்பான், பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

என்றும்,

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்றும்,

"மேலிருந்தும் மேல்அல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழ்அல்லார் கீழ்அல் லவர்’

என்றும் அருளிச் செய்தனர்? இழிந்த தன்மைகளும் இழிந்த செய்கைகளும் உலகிற் கணக்கற்றனவாய்ப் பெருகி இருப்பினும் அவை எல்லாவற்றுள்ளும் மிகக் கொடியவை இரக்கம் அற்ற வன்னெஞ்சமுங் கொலைத் தொழிலுமேயாகும். உயிர்களைக் காலை செய்தலும் அவற்றின் ஊனைத் தின்னுதலுமாகிய புலைத்தொழில் எல்லாத் தீவினைத் தொழிலிலும் கடைப்பட்ட தென்னும் உண்மை.

“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை

என்னுந் தமிழ்மறையான குறளினாலும்,

“உயிர்களைக் கொல்லச் சொன்னவன், கொன்றவன், ஊனை அறுக்கிறவன், அதனை விற்றவன், அதனை வாங்குகிறவன், அதனைச் சமைக்கிறவன், பரிமாறுகிறவன், தின்கிறவன் என்னும் அவர்கள் அனைவருங் கொலைகாரர்களென்று சொல்லப்படு கிறவர்கள்”என்னும்வடமொழிமனுமிருதியினாலும் தெளியப்படும். இவ்வளவு இழிந்ததாக இருத்தலினாலேதான் உயிர்க் காலை செய்பவர்களும் அதற்கு ஏதுவாய் இருப்பவர்களும் இழிகுலத்தவரென்றும், அப்புலைத் தொழிலைவிட்டுச் சைவவொழுக்கம் பூண்டவர்கள் உயர்குலத்தவரென்றும் வகுக்கப்படுவாராயினர்.

அரு

காலையாகிய தீவினைக் கடலைத் தாண்டி ளொழுக்கமாகிய நல்வினைக் கரைமேல் ஏறின மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/53&oldid=1584256" இலிருந்து மீள்விக்கப்பட்டது