உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

29

குலத்தவர்கள் கொல்லா அறத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லுதலாகிய படகைக் கொண்டு சென்று அத்தீவினைக் கடலிற் கிடந்து தத்தளிக்கும் மற்றைத் தாழ்குலத்தவரை எடுத்து உயர்த்திக் கரை சேர்த்தலே புகழும் அறமும் ஆகும்.

கொலையையும் புலால் தின்னுதலையும் ஒருவன் அறவே ஒழித்துவிடுவானாயின், அதனால் எத்தனையோ ஆடு மாடுகள் கோழி குருவிகள் மான்கள் மீன்கள் உயிர் பிழைக்குமல்லவோ? இங்ஙனமே ஒவ்வொருவராய்ப் புலைத் தொழிலைப் பலரும் நீக்க நீக்க எண்ணிறந்த உயிர்களுந் தத்தம் உடம்புகளில் நிலை பெற்று நின்று இனிது உயிர்வாழும் அல்லவோ? நம்முடைய உயிர் வாழ்க்கை நமக்கு இனிதாய் இருத்தல் போலவே எல்லா உயிர்களுக்குந் தத்தம் உயிர் வாழ்க்கை இனிதாயிருக்கின்றது.

எல்லா அறங்களிலும் மேலதாய் விளங்குங் கொல்லா அறத்தைக் கைபற்றி ஒழுகும் நல்வினை வாய்ந்து அதனைப் பிறர்க்கு அறிவுறுத்தும் நிலையிலுள்ள சைவரும் பார்ப்பனருந் தமது உயர்வை மறந்து, தாமும் ஆடு மாடு கோழி வெட்டிப் பலியிடுந் தீவினைப் படுகுழியில் வீழ்ந்தால் இனி உலகத்தில் நல்லறம் நிலைக்குமோ, சொல்லுங்கள்! கொல்லா அறத்திற்கு ஒரு பாதுகாவலாய் அமைந்த மேற்குலத்தாரே அதனை அழித்தால் அதனினும் பெருந்தீவினை வேறுண்டோ? 'வேலியே பயிரைத் தின்றால் விளைவதெப்படி?'

னி, இச்சிற்றுயிர்களை நம் பொருட்டுக் கொல்லாமற் சிறு தெய்வங்களின் பொருட்டுக் கொல்விக்கின்றோமாதலால் அது தீவினையாகமாட்டாதெனின், அது பொருந்தாது.

பிடாரி, குரங்குணி, எசக்கி, மதுரை வீரன் முதலானவை யாவை? தாம் உயிரோடிருந்த காலங்களிற் பலவகையான கொடுஞ் செயல்களைச் செய்து அவற்றிக்காக அரசனாலும் பிறராலும் ஒறுக்கப்பட்டுக் காலம் முதிரா முன்னரே இறந்தொழிந்த மக்களின் பேய் வடிவங்களேயாகும். அவை தாம் செய்த தீவினையால் இந்த நிலவுடம்பை விட்டுப் பேய் உடம்பிற் புகுந்து இருள் உலகத்தில் அலைந்து திரிகின்றன; தாம் செய்த தீவினை னை பேய் உடம்பில் தாம் அடையும் கொடிய நிரயத் துன்பத்தால் தீர்ந்தவுடன், முழுமுதற் கடவுளின் திருவருளாணை யால் மறுபடியும் அவை மக்களுடம்பிற் பிறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/54&oldid=1584257" இலிருந்து மீள்விக்கப்பட்டது