உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் -17

அறிவில்லாத மாந்தர்கள் வணங்கிவருஞ் சில்லறைத் தெய்வங்களிற் பல இப்போது மக்களாய்ப் பிறந்திருக்கு மாதலால், அவைகள் இவர்களாற் செய்யப்படும் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொள்ள மாட்டாதனவாய் இருக்கின்றன. 'இப்போது இத் தெய்வத்தின் ஆட்டம் இங்கே ஓய்ந்து போயிற்று' என்று அவற்றை வணங்குவோர் சிலகாற் சொல்லுஞ் சொற்களே இதற்குச் சான்றாம்.

மக்களாய் இருந்தபோது கொலை களவு காமங்கட்குடி முதலான தீவினைகளைச் செய்து சடுதியில் இறந்து கடவுளின் ஆணையாற் பேய் வடிவங்களாய் அலைந்து திரியும் அவ் வி களை வணங்குதலே குற்றமாகும். ஏனென்றாற், கொலைகாரர்களோடு பழக்கஞ் செய்பவன் அக்கொலைஞ ராலுங், கள்வரோடு நேசஞ்செய்பவன் அக்கள்வர் கூட்டத் தாலும், வேசிக் கள்வரோடு சேர்க்கையுள்ளவன் அவ்வேசிக் கள்வராலுங், கட்குடியரோடு சேர்ந்தவன் அக்கட்குடியராலுஞ் சூழப்பட்டுப் பெரிதுந் துன்புறுதல் போல, இத்தீய பேய் வடிவங்களைத் தெய்வங்களாக வணங்குவோரும் இவ் ஆவிகளால் எந்நேரமுஞ் சூழப்பட்டு அவற்றால் மிகவுந்

துன்புறுத்தப்படுவார்கள்.

வ்

கொலை முதலான தீவினைகளைச் செய்வோர் நல்லோரை அணுகாமல் அஞ்சி விலகிப் போதல்போல, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவத்தை வழிபடும் நல்லோரைக் கண்டு க்கொடும் பேய்கள் அஞ்சி விலகி ஓடும். இவ்இயல்புக ளெல்லாம் யாம் எழுதிய 'மரணத்தின் பின் மனிதர்நிலை' என்னும் நூலில் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்; அவை எல்லாம் இங்கு விரிப்பதற்கு இடம் ம் இல்லாமையால் அதிற் கண்டுகொள்க.

நம் போன்ற சிற்றுயிர்களிற் சேர்ந்த இப்பேய்களையும் மற்றெல்லா உயிர்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லது சிவம் ஒன்றேயாம். தீவினைகளைச் செய்து பிறப்பிலும் இறப்பிலும் கிடந்து உழன்று வருந்தும் பேய்கள் எதனையும் ஆக்கவேனும் அழிக்கவேனுஞ் சிறிதும் வல்லன அல்ல.

இத்தகைய பேய்களைத் தெய்வங்களாக வணங்குவது எது போலிருக்கிற தென்றால், ஓர் அரசன் கீழ் இருந்து வாழுங் குடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/55&oldid=1584258" இலிருந்து மீள்விக்கப்பட்டது