உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

31

தம் அரசனை வணங்காமல் அவ்வரசனால் ஒறுக்கப் பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்குங் குற்றவாளிகளை அவ் வரசனாகக் கருதி வணங்குதலையே ஒத்திருக்கின்றது. ஆக்கவும் அழிக்கவும் வல்லவனான இறைவனாற் படைக்கப்பட்டு அவ்விறைவனுக்குப் பிள்ளைகளாய் உள்ள எல்லா உயிர் களுள்ளும் மக்களென்னும் உயிர்கள் மற்ற ஏழையுயிர்களான ஆடு மாடு கோழி பன்றி முதலியவற்றை வெட்டி அவற்றிற்குப் பலியிடுவது எதனை ஒத்திருக்கிறதென்றால், ஓர் அரசனுக்குரிய குடிமக்களிற் சிலர் தம்மினும் வலி குறைந்த மற்றவர் சிலருடைய கைப்பொருள் களைப் பற்றிக்கொண்டு போய் அக்குற்ற வாளிகளுக்குக் கொடுத்து அவர்களை அரசராகக் கருதி வணங்குவதையே ஒத்திருக்கின்றது. தன்னால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை இங்ஙனம் வணங்குபவர் இன்னார் என்று தெரிந்த அளவானே, அரசன் அவர்களைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவது போல, இறைவனுந் தன்னால் ஒறுக்கப்பட்ட பேய்களுக்குத் தான் படைத்த உயிர்களைக் கொண்டு பலியூட்டும் அறிவில்லா மாந்தரைக் கூற்றுவனைக் கொண்டு மிகவும் கடுமையாகத் துன்புறுத்துவன் என்பது திண்ணம்.

சிறு தெய்வங்களுக்கு உயிர்களைக் கொன்று பலியிடுவோர் இம்மையிலே தம் பிள்ளைகளைப் பறிகொடுத்து வருந்துவர்; தாமும் நச்சுக் காய்ச்சல், அம்மை, தொழு நோய், கக்கற்கழிச்சல், பொருட்கேடு முதலான துன்பங்களுக்கு ஆளாகிப் பதை பதைப்பர்; மறுமையிலும்,

“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லிடி காரர் வரிகயிற் றாற்கட்டிச்

செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே"

என்றும்,

“கொன்றி லாரைக் கொலச்சொல்லிக் கூறினார் தின்றிலாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார்

பன்றியாய்ப் படியிற்பிறந் தேழ்நரகு

ஒன்றுவார் அரன் ஆணையி துண்மையே.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/56&oldid=1584259" இலிருந்து மீள்விக்கப்பட்டது