உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 17

என்றுந் திருமூல முனிவர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணங் கூற்றுவன் தமரால் அலை நிறைந்த நிரயத்திலும் மற்ற எழுவகை நிரயங்களிலும் அழுத்தப்பட்டு மிக நொந்து திரும்பவும் இந்நிலவுலகத்திற் பிறக்குங்காற் பன்றியாய்ப் பிறந்து நைவார்கள்.

எல்லா உயிர்களையும் படைக்கும் இறைவன் ஒருவனே அவற்றின் கால எல்லை அறிந்து அவற்றை அழித்தற்கும் உரியவன் அன்றி, மற்ற மக்கள் நம் போன்ற உயிர்களான பேய் வடிவங்களின் பொருட்டு வாய் அற்ற ஏழை உயிர்களின் கழுத்தை வெட்டிப் பலியூட்டுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமுந் தீவினையுமாய் முடியும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

முழுமுதற் பொருளான சிவபெருமானை நேரே வணங்கும் நல்வினையும் நல்லறிவும் இல்லாதவர்கள் காளி, கூளி, எசக்கி, கறுப்பண்ணன், மதுரைவீரன் முதலான சில்லறை வடிவங்களை வணங்கினாலும் அவற்றிற்கு ஆடு, கோழி, மாடு முதலிய உயிர்களைப் பலியிடாமல் வணங்குதலே செயல் வேண்டும். அங்ஙனம் இன்றி, அவற்றைப் பலியிட்டால் அவ்வுயிர்ப்பலிக் கடனைக் அவைகள் ஏற்றுக் கொள்ளமாட்டா. ஏனெனில் நிலவுலகத்தில் தாம் செய்த தீவினைகளுக்காக இறைவனால் ஒறுக்கப்பட்டு முன்னமே அலறித் திரியும் அப்பேய்கள் மாந்தர்கள் அறியாமையாற் செய்யும் உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளுமாயின், இறைவன் படைத்த உயிர்களை மக்கள் கொலை செய்யுந் தீவினைக்கு ஏதுவாய் இருந்தமை பற்றி அப்பேய்களை நம் பெருமான் இன்னும் கடுமையாகத் துன்புறுத்துவன். ஆனது பற்றி மக்கள் உயிர்ப்பலி இடுங்காலங் களில் எல்லாம் அப்பேய்கள் இறைவனது ஒறுப்புக்கு மிக நடுநடுங்கி அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அப்பால் விலகி ஓடிப்போகும். அதனால் அத்தீவினைக்கு அவைகள் ஆளாவ தில்லை. அவற்றைச் செய்யும் மாந்தர்களே அத்தீவினைக்கு முற்றும் உரியவராகின்றார்கள்.

அப்பேய்கள் மக்கள் மேல் ஏறி நின்று ஆடிய சில நேரங்களில் யாம் அவற்றின் நேரேயிருந்து கேட்டபோது அவை தமக்கு உயிர்ப்பலி ஆகாதென்றே கூறின. பொய்யாக மருள் காண்டு ஆடும் பால்லாத மாந்தர்களே உயிர்ப்பலியிட வேண்டும் என்று சொல்லிப் பழிக்குந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/57&oldid=1584260" இலிருந்து மீள்விக்கப்பட்டது