உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் 17

வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க குணம் உடையராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல கடவுள் அருள்புரிவான். இது,

66

'கல்லால் எறிந்துங் கைவில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன், கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே”

என்று அருட்பெருஞ் செல்வரான தாயுமான அடிகள் கூறியவாற்றானுந், திருவருட் செல்வரான இராமலிங்க அடிகள்,

“வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்

மனங்கலந்து மதிகலந்து வயங்காநின்ற என்புகலந் தூன்கலந்து புலன்களோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்குகின்ற

அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்

ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி

எழுங்கருணைப் பெருக்காறே இன்பத்தேவே”

என்னும் அருட்பாவினாற் கொலைக் குணமில்லாதவர்களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிவான் என்று கூறியவாற்றானும் நன்கு விளங்கும்.

இன்னும் பேரிரக்க குணமான கொல்லாமை உடையவர் களுக்கு எல்லா நற்குணங்களுந் தாமே வந்து பொருந்து மெனவும், அவ்விரக்க குணம் இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய குணங்களும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைத் தனி விலங்குகளாக்கி விடுமெனவும் இனிது விளங்கும் பொருட்டே நம் தாயுமான அடிகள்,

“கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்”

என்றும்,

“கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/61&oldid=1584265" இலிருந்து மீள்விக்கப்பட்டது