உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

37

என்றும் அருளிச் செய்தனர்களாயிற் கொல்லா விரதமாகிய தெய்வத்தன்மையின் மேன்மையையுங் கொலைக் குணமாகிய விலங்கின்றன்மையின் மையின் தாழ்மையையும் யாம் சொல்லுதலும் வேண்டுமோ?

விரித்துச்

இங்ஙனம் இரக்கமற்ற கொடிய கொலைத் தொழிலையும் அதனால் வரும் புலால் உண்ணுதலையும் நாம் பழகி வருவோமா யின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி கரடி சிங்கம் முதலிய விலங்குகளின் இயல்பை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களையும் அக்கொடிய தன்மையை அடையும்படி செய்துவிடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் புலால் தின்று பழகுவாராயின் அவரோடு சேர்ந்த அக் குடும்பத்தாரும் நண்பர் களும் அவரைப்போற் புலால் தின்று கெட்டுப்போவர். இது பற்றியே,

66

"கொலையிலான் உதவு மன்னங் கூறிற்பே ரமுத மாகும்,

கொலையுளான் உதவும் அன்னங் கூறிற்பேர் விடமதாகும் புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறுபோலக்

கொலைஞர்தம் மனையில் உண்போன் கொலைஞனே ஆவனன்றே” என்னும் திருமொழியும் எழுந்தது.

இனி, அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுருவாயும் ளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும் அருளும் இரக்கமும் நிரம்பியிருக்கின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான். இரக்கமில்லாமற் பல உயிர்களையுங் கொன்று தின்று வாழும் மக்களிடத்து அன்பு வைத்து அருள்புரியான் என்பதும் வெளிப்படையாகும்.

நாம் நம் தாயின் கருப்பையிலே தங்கியிருந்த காலத்தும், நிலத்திற் பிறந்து வளர்ந்து வருகின்ற காலத்தும் நமக்கு வேண்டுவனவற்றை நாம் கேளாமலே தானே அறிந்து கொடுக்கும் ஆற்றலும், நம்மாற் சிறிதுஞ் செய்யலாகாத உடம்பின் அமைப்புகளையெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்து வரும் ஐயன் அருள்வலிமையும் இங்கு என்னென்று எழுதுவோம்!

இத்தனை இரக்கமுள்ள எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந் தந்தைக்கு அருமைப் புதல்வர்களாம். உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/62&oldid=1584266" இலிருந்து மீள்விக்கப்பட்டது