உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் -17

வாய்ந்த எல்லா உயிர்களுந் தம்முள் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றியமையாத கடமையாகும். இதனை நினையாமல் மக்களான நாம் நம்மினுந் தாழ்ந்த உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் சினங்கொண்டு நம்மைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவா னென்பது திண்ணம். இதுகுறித்தே,

"கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வரிகயிற்றாற் கட்டிச் செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே”

என்றும்,

“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்

மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே

என்றுந் திருமூல நாயனார் திருவாய்மலர்ந்தருளினார். நாம் இப்பிறப்பிற் புலால் தின்றால் மறுபிறப்பிற்றானே ஏதோ கடவுள் ஒறுக்கப் போகின்றார் என்று எண்ணிவிடாதீர்கள்! புலால் உண்பதனால் இந்தப் பிறவியிலேயே கோமாரி, அம்மை, கக்கற் கழிச்சல், வயிற்றுவலி முதலிய நோய்களையும், வறுமை, மனக்கவலை, சண்டை, கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் நம்மை நம் ஆண்டவன் துன்பப்படுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயனாரருளிச் செய்த,

ஏவி

“குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்

சூழ்ந்த களவெலாம்

செற்றொருவரைச் செய்த தீமைகள்

இம்மையேவருந் திண்ணமே,

மற்றொருவரைப் பற்றி லேன்மற-

வாதொழி மட நெஞ்சமே

புற்றரவுடைப் பெற்றமேறி

புறம்பயந் தொழப் போதுமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/63&oldid=1584267" இலிருந்து மீள்விக்கப்பட்டது