உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

6. கடவுளுக்கு அருளுருவம் உண்டு

அன்பர்கள் சிலர் கடவுளுக்கு உருவம் இல்லையென்றும், மக்களுக்குரிய கண் கால் முதலிய உறுப்புகளின் அமைப்புகளை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமாமென்றுங் கூறுகின்றார்கள். ஆயினுங், கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகிறது.

உருவமென்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்த லாகாது. உருவம் மூன்று வகைப்படும். அஃது அறிவில்லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின்கண் அமைந்ததும், அறிவொடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைந்ததும், இவற்றிலெல்லாம் மேலதான அறிவின்கண் அமைந்ததும் என மூன்றாம்.

அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப்பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையைவிட்டு ஓர் ஒழுங்குப்பட்ட விடத்தே உளதாவது வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும்போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல்வடிவாயிருந்த ஆவியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்றுமண்டிலம், திங்கள் டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பிறகுதான், அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுகின்றன. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பிறகுதான் பெரிதும் பயனுடையனவாகின்றன.

மண்

பல

இனி, அறிவுடைய உயிர்கட்கு இருப்பிடமான திறப்பட்ட உடம்புகளும் ஆவி வடிவில் நின்றக்கால் உயிர் களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும், அவை ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/65&oldid=1584270" இலிருந்து மீள்விக்கப்பட்டது