உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

41

ஒழுங்குபட்டு உடம்புகளாய்த் தோன்றிய பின்னரே அவ்வுயிர் களுக்குப் பெரிதும் பயன்படுவனவாய் அமைந்த மையும் உணரற் பாலனவாம். ஆறறிவுடைய மேலான மக்கட் பிறவி யெடுத்த நம்மனோர் தத்தம் உடம்புகளில் இருந்து வாழாராயின் அவரெல்லாம் அறிவு விளங்கப் பெறுவரோ? மக்களுடம் பிலமைந்த கண், செவி முதலான உறுப்புகள் எத்துணை வியப்பான உருவ அமைப்பொடு பொருந்தி மக்கள் அறிவு விளக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றன! இவ்வுருவ அமைப்பு களும், உடம்புகளும் இல்லாதொழியின் மக்கள் அறிவு நிலை என்னாம் என்பதனை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? கண் பழுதான குருடனுங், காது கேளாத செவிடனும், வாய் பேசாத ஊமனுங், கைகால் குறைந்த முடவனும் எவ்வளவு அறிவு விளக்கத்தை யிழந்து எவ்வளவு துன்பத்தை அடைகின் றார்கள்! இதனால் உருவ அமைப்புகள் திருத்தமாய் முதிர முதிர மக்கள் அறிவும் முதிருமென்பதும் புலனாகின்றதன்றோ?

இனி, அறிவின்கண் அமைந்த உருவத்தின் மேன்மையையும் ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும். தாயின் கருப்பையிலிருந்து பிறந்த மகவுக்கு உள்ள அறிவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அதன் அறிவு எவ்வளவு மழுக்கமடைந்திருக்கின்றது! அந்த நிலையில் அதற்கும் அறிவில்லாக் கல்லுக்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லை. கல் ஏதொரு முயற்சியுமில்லாது கிடக்க அம்மகவோ வாய் திறந்து அழுதலும் பால் பருகுதலும் ஆன முயற்சி உடையதாயிருத்த லொன்றே அது கல்லின் வேறுபட்ட தன்மையுடையதென்பதை நமக்கு அறிவிக்கின்றது. அக்காலத்தில் எதனையும் நினைக்க வாவது அறியவாவது உணரவாவது அது வல்லதன்று.

அங்ஙனமிருந்த அம்மகவு பசியால் உந்தப்பட்டுப் பால் பருகியும், அப்பாலைத் தரும் அன்னையை அறிந்தும், அதன்பின் தந்தையையும் உலகத்துப் பல பொருள்களையும் படிப்படியே அறிவதாகியுஞ் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுகின்றது. அங்ஙனம் அதன் அறிவு மழுங்கியிருந்த நிலைக்கும் விளங்கி வரும் நிலைக்கும் வேறுபாடு என்னவென்றால், அழுக்குப் படிந்த கண்ணாடியில் ஏதோர் உருவமுந் தோன்றாமைபோல மகவின் அறிவில் ஏதோர் உருவமுந் தோன்றாதிருந்தமையே மழுங்கிய நிலையென்றும், இனி அஃது உலகத்துப் பொருள் களை அறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/66&oldid=1584271" இலிருந்து மீள்விக்கப்பட்டது