உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் -17

இனிக், கல்வியறிவின் உதவி கொண்டு செய்யப்படும் எல்லாக் கைத்தொழில் முயற்சிகளும் உழவு, நெசவு, வாணிகம் என்னும் மூன்று பகுதியிலே அடங்கும். அவற்றுள், உழவுத் தொழில் உடம்பைப் பாதுகாத்தற்கு முதன்மையான உணவுப் பொருளைத் தருவதொன்றாகையால், அது மற்றையிரண்டிலுஞ் சிறந்ததென்று ஆன்றோரால் உயர்த்து வைக்கப்படுவதாயிற்று. இவ்வுண்மை,

66

“சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை

என்று திருவள்ளுவ நாயனாரும்,

66

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு'

وو

என்று ஔவையாரும் அருளிச் செய்த மெய்ம்மொழிகளால் அறிந்து கொள்ளப்படும். இவ்வளவு சிறந்த தொழிலை நம் நாட்டவர்கள் சிறிதுந் தாழ்வாக நினையாமல் அதனைப் பல வகையாலும் பயன் மிகத் தரும்படி மேன்மேற் பெருகச் செய்தல் வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பா முதலான நாடுகளிலுள்ள மேலோர்கள் நிலத்தை வளப்படுத்துதற்குரிய புதிய புதிய முறைகளைக் கையாண்டு காலத்திற்கேற்ற பயிர்களை விளைவித்து ஏராளமான கூலங்களையும், மற்றைப் பண்டங் களையும், உணவுப் பொருள்களையும் பெறுகின்றார்கள். மழை பெய்ய வேண்டும் காலத்து மழை பெய்யாவிட்டாலும், அதனால் அவர்கள் கேடு உறாமல் மின் ஆற்றலின் உதவி யினாலும், வேறு சில முறைகளினாலும் பயிர் பச்சைகளை விளைவித்துக் கொள்ளுகின்றார்கள். நம் நாட்டவர்களோ என்றால் ஒரு மழை தவறினாலும், பயிர் பச்சைகளை வளர்க்கும் வழி தெரியாது கொடும் பஞ்சத்திற்குள்ளாகி மிகவுந் துன்புறுகின்றார்கள்.

மேலும் பலப்பல பயிர்களின் தன்மைகட்கிசையப் பல திறப்பட்ட எருக்களை அவர்கள் திறமையாகச் சேர்ப்பது போல, நம்மவர்க்குச் சேர்க்கத் தெரியாது. பயிர்கட்குத் தக்கவாறு தரியாது.பயிர்கட்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/85&oldid=1584291" இலிருந்து மீள்விக்கப்பட்டது