உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

61

சவ்வையான எருச் சேர்க்க நம்மவர்களுங் கற்றுக் கொள்வார்களாயின் இப்போதடையும் ஊதியத்தினும் பதின் மடங்கு மிகுதியான ஊதியத்தைப் பெறுவார்களென்பதில் எட்டுணையும் ஐயமின்று. இங்ஙனமே பயிர்த் தொழிலில் அறியற்பாலனவாய் உள்ள நுட்பங்கள் எண்ணிறந்தன. இவையெல்லாங் கல்வியறிவின்றி வரமாட்டா. ஆகையால், இவற்றைக் கல்வியறிவால் ஆராய்ந் தறிந்து உழவுத் தொழிலைச் சிறக்க செய்வார்களாயின் நம்மவர்களும் நம் நாடும் மற்ற எல்லாரையும், எல்லா நாடுகளையும்விட மிகச் சிறந்து விளங்குமென்பது திண்ணம்.

னி, உழவுத்தொழிற்கு அடுத்த நிலையில் அகத்தியமாகச் செயற்பாலது நெய்தற்றொழிலேயாகும். நாகரிக வாழ்க்கை யுள்ள எத்திறத்தவர்களுந் தமதுடம்பை மறைத்தற்கு ஆடைகள் வேண்டி நிற்கின்றனரல்லரோ? “ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழிப்படி மேலே துணியில்லாதவர் விலங்குகளினுந் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். விலங்கினங் கட்காயினும், மேற்போர்வை போன்ற மயிர்க் கற்றைகளுங் குறிகளை மறைத்தற் கேற்ற வாற்புறங்களுங் கடவுளால் அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. மக்களோ பகுத்தறிவு உடையராயிருத்தலால் அவர்கட்கு அவற்றைக் கொடுத்திலர். அவர்கள் தமதறிவு காண்டு ஆடை நெய்து உடுக்க யிருக்கின்றார்கள்.

வேண்டியவர்களா

உடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாச் சிறப்பினதான உணவைத் தருதல் பற்றி உழவுத் தொழில் எல்லாத் தொழிலும் மேலானதென்று சொல்லப்படினுந் தீவினை ஒரு சிறிதுமில்லாத் தொழில் எதுவென்று ஆராயுமிடத்து, அது நெய்தற்றொழி லாகவேயிருத்தலால் அவ்வகையில் அஃது உழவுத் தொழிலிலும் மேலானதென்றே கொள்ளப்படும். இதுபற்றியன்றோ, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் உழவுத் தொழிலையே சிறப்பித்துக் கூறினாரானுந், தாம் நெய்தற்றொழிலையே செய்து கொண்டு உயிர் வாழ்ந்தனர்.

உழவு செய்யுங்காற் சிற்றுயிர்கள் சில பல மாளுதலின், அதிற் சிறிது தீவினை உண்டென்றும், நெய்தற்றொழிலில் ஓருயிர்க்குந் தீங்கின்மையின் அதிற் சிறிதுந் தீவினையில்லை யென்றும் அறிதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/86&oldid=1584292" இலிருந்து மீள்விக்கப்பட்டது