உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் -17

போது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேடி உட்கொண்டும், மலையருவி ஆறு ஏரிகுளங் கூவல் முதலியவற்றின் நீரைப் பருகியும், பசி தீர்ந்தபின் மரங்களின் அடியிலோ, செடிகளின் நடுவிலோ, மலைப் பிளவுகளின் இடையிலோ கிடந்துங் கவலையின்றி உறங்கிக் காலங் கழிக்கின்றன.

மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும். இச்சிற்றுயிர் களுக்கோ ஆடையும் வேண்டுவதில்லை; மழையில் நனை யாமலும் பனியில் குளிராமலும் வெயிலில் வெதும்பாமலும்

அவ்வுயிர்களைப் பாதுகாக்க தடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான்.

L

வெப்பம்மிகுந்த நமது தமிழ்நாட்டிலுள்ள ஆடு மாடுகளுக்குக் குளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமையால், அவைகளின் உடம்பின்மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால், வடக்கே இமயமலையிலும், அம்மலைச் சாரலில் உள்ள டங்களிலும் போய்ப் பார்த்தால், அங்குள்ள ஆடு மாடுகளுக்கு அடர்ந்து நீண்ட மயிர்களிருத்தலைக் காணலாம். ஏனென்றால், அம்மலை நாடுகளில் தாங்கமுடியாத பனியும் குளிரும் மிகுந்திருக்கின்றன; அவ்வளவு குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளன வாயிருந்தால். அவை உடனே விறைத்து மாண்டுபோகும். ஆதலால், அவ்வாடு மாடுகள் அங்குள்ள பனியிலுங் குளிரிலும் மாண்டு போகாமல் அவற்றைப் பாதுகாப்பதற்காகவே எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின்மேல் நீண்ட அடர்ந்த மயிரை வளரச் செய்திருக்கின்றான்.

ஆகவே, உணவின் பொருட்டும் உடையின் பொருட்டும் இருப்பிடத்தின் பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற் தாழ்ந்த சிற்றுயிர் களுக்குச் சிறிதும் இல்லை. வேண்டும்போது இரைதேடித் தின்றும், உறக்கம் வந்தபோது உறங்கியும், ஆணும் பெண்ணு மாய்க் கூடித் தம் இனங்களைப் பெருக்கியும் அவைகள் கவலையின்றிக் காலங் கழிக்கின்றன. இப்படிப்பட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கையையும், உணவுக்கும் உடுப்புக்கும் இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு, மனைவியாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/89&oldid=1584295" இலிருந்து மீள்விக்கப்பட்டது