உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

65

கணவனுங், கணவனால் மனைவியும், பெற்றோராற் பிள்ளைகளும், பிள்ளைகளாற் பெற்றோர்களும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் ரு குடும்பத்தாரும்,ஓர் ஊராரால் அவர் தம் அரசரும், ஓர் அரசரால் அவர் தம் ஊராரும் ஆக எல்லாருமாய்ப் பலவகைத் துன்பங்களுக்கு ஆளாகி நோயிலும் கவலையிலும் இடையறாது உழன்று வருந்தி வரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்ப வாழ்க்கையைவிடச் சிற்றுயிர்களின் இன்ப வாழ்க்கை எத்தனையோ மடங்கு சிறந்ததாய்க் காணப்படுகின்றதன்றோ? நம்மைப் படைத்த உண்மையான கடவுளை நினையாமல் நம் போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியுந் தம்மையே தாம் பெரியராக நினைத்தும் வாழ்நாள் முதிரா முன்னரே கவலையாலும் நோயாலுங் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட் பிறவியைவிட, இறைவனது பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர் வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்ததாயிருக்கின்றதன்றோ?

அங்ஙனம் இருக்க, உண்ணல்

உடுத்தல் உறங்கல் ன்புறுதல் என்னும் இவைகளாலேயே மக்கள் வாழ்க்கை யானது சிறந்ததாயிருக்கின்றதென நினைப்போமாயின், அஃது எவ்வளவு பேதைமையாகக் காணப்படுகின்றது?

அப்படியானால், எல்லாப் பிறவிகளையும்விட மக்கட் பிறவியே சிறந்ததென்று அறிவுடையோர்களும் அவர் செய்து வைத்த நூல்களுஞ் சொல்வது ஏன் என்றால், எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்ததாயிருக்கின்றது என்பதை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும். மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாயிருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனாலே தான் நமது பிறவியானது மற்ற விலங்கின் பிறப்பை விடச் சிறந்ததாகுமென்று அறிகின்றோம்.

விலங்குகளுக்கு

து நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் இயலாது. அவை வழக்கமாய்த் தின்னுந் தீனியையே உட்கொள்ளும்; பெரும் புதர்களிலும் மலைக் குகைகளிலும், மர நிழல்களிலுங் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றிற்கு மேல் அவைகள் ஒன்றையும் அறிய மாட்டா;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/90&oldid=1584296" இலிருந்து மீள்விக்கப்பட்டது