உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

67

இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும் அடைந்து வரும் பயன்களும் அளவிடப்படா.நாவுக்கு இனிமையான பண்டங்களை நாளுக்கு நாட் புதிய புதியவாகச் செய்யக் கற்று வருகின்றோம்; கண்ணுக்கு அழகான உடுப்புகளையும் நகைகளையும் வகை வகையாகச் செய்வித்து அணிந்து வருகின்றோம். பார்க்கப் பார்க்கக் கவர்ச்சி தரும் ஓவியங்களை (சித்திரப் படங்களை) எழுதுவித்தும், பாவை களைச் செய்வித்தும் அவற்றை நம்முடைய இல்லங்களில் வைத்துப் பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன் மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப் பசிய தோட்டங்களையும் அமைப்பித்து அவ்வீடுகளில் களிப்புடன் குடியிருந்தும் அத்தோட்டங்களில் மனக்கிளர்ச்சியோடு உலவியும் வருகின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவு முதலான இசைக் கருவிகளின் இனிய ஒலிகளையும், அவற்றோடு சேர்ந்து பாடுவார்தம் இசைப் பாட்டுகளையுங் கேட்டுப் பெருங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணங் கமழும் பலவகை மலர்களைச் சூடியும், அம்மலர்களிலிருந்துஞ், சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலியவற்றிலிருந்தும் பெற்ற நெய்யையுங் குழம்பையும் பூசியும் இன்புறுகின்றோம்; மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவைகளின் தூவிகளாலும் அமைக்கப் பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த மருப்புக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின் மேற்படுத்து இனிது உறங்குகின்றோம். இன்னும்,ஏவற்காரரால் வீசப்படும் வெட்டி வேர் விசிறிகளாலுந் தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற்கால வியர்வையினையும் புழுக்கத்தினையும் மாற்றி திறமைமிக்க L புலவர்களால் எழுதப்படும் புதியபுதிய கதைகளைப் பயின் உள்ளங் களிக்கின்றோம்.

மகிழ்ச்சியடைகின்றோம்.

இங்ஙனமாக, நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் உதவியைக் காண்டு நாளுக்கு நாள் நாம் அடைந்து வரும் இன்பங்களை முற்ற எடுத்து முடித்து உரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு டங் கொள்ளாது.

மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்கு தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்து வருவதுடன் பகுத்துணர்ச் சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/92&oldid=1584298" இலிருந்து மீள்விக்கப்பட்டது