உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 17

அறிவுடையோர்களாற் புதிய புதியவாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால், நாம் எல்லை யில்லாத இடர்க்கடலினின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் புதுப்புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம்.

அறுபது எழுபது

நீராவி வண்டிகள் ஏற்படாத ஆண்டுகளுக்கு முந்தி நம் முன்னோர்கள் ஓர் ஊரிலி ருந்து தாலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்ல நேர்ந்தால் அப்போது அவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள்! அக்காலங்களிற் செவ்வையான பாட்டைகள் கிடையா. இருந்த சில பாட்டைகளோ கல்லுங்கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக் கால்நடையாய்ச் செல்வார்க்கும் மாட்டு வண்டிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்தத்தையுங் காலக்கழிவினையும் பணச்செலவினையும் உண்டாக்கின. அப்பாட்டைகள் காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள் இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச்

செல்வோர்கள் புலி கரடி ஓநாய் பாம்பு முதலான

கொடுவிலங்குகளாலுங் கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும்; பொருள் இழந்து அரிதாய உயிர் தப்பியுந் துன்புற்றார்கள், வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்து விட்டால், ஓடம் விடுவார் இல்லாதபோது, அக்கரையில் வந்துசேர்ந்தார் அங்கேயும், இக்கரையிற் போய்ச் சேர்ந்தார். இங்கேயும் ஆக, வெள்ளம் வடியும் நாட்கள் வரையிற் கவலையொடு காத்திருந்தார்கள்.

கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள பிறிது ஓர் ஊர்க்குச் செல்ல இத்தனை துன்பங்களை அடைந்தார் களென்றாற், கடல் சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களும், பெருங் கடல்களுக்கு அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) முதலான நாடுகளிலிருந்த மாந்தர்களும் இப்பரத நாட்டுக்கு (இந்தியாவுக்கு) வரவும் இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல் நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும்!

அக் கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத் திலிருந்த முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/93&oldid=1584299" இலிருந்து மீள்விக்கப்பட்டது