உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

71

லங்கையில் இருப்பவர்கள் இந்தியாவிலிருக்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் இந்தியாவிலிருப்பவர்கள் இலங்கையில் இருக்குந் தம் நண்பர்கட்குங் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடிதத் துண்டில் எழுதி மின்கம்பிச் சாலைக்கு விடுத்து, அதற்குரிய சிறு கூலிக் காசையுங் கொடுத்து விட்டால், ஒருமணி நேரத்தில் இந்தியாவிலிருப்பவர்க்கோ இலங்கையிலிருப்பவர்க்கோ தெரிவிக்கப்படுகின்றன; அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறுமொழியும் வருகின்றது. இந்தப் படியாகவே, இந்தியா இலங்கைக்கு ஆறாயிரங்கல் எட்டியுள்ள சீமை முதலான ங்களுக்குஞ் சில மணி நேரத்திற் செய்திகள் தெரிவித்தலும், ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ளுதலும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நடந்து கொண்டு இருக்கின்றன.

அச்செய்திகள் உ னே

ஆறாயிரங்கல் எண்ணாயிரங்கல் அகன்றுள்ள நாடுகளுக் கெல்லாம், இங்ஙனம் முற்காலத்திற் செய்திகள் விடுத்தல் முடியுமா? சிறிதும் முடியாதே. இவ்வளவு வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர்கள் இடைவிடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின்வடிவு முதலான கட்புலனாகா நுண்பொருள்களின் இருப்பையும் வலிவையும் இயக்கத்தையும் பயனையுங் கண்டுபிடித்தமையால் அன்றோ?

இன்னும் ஒரு புதுமையைப் பாருங்கள்! ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த நம் முன்னோர்களிற், பட்டமரமுந் தளிர்க்கக் கேட் பறவைகளும் மயங்க இன்னிசை பாடுவதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள். ஆனால், அவர்கள் இறந்ததும் அவர்களின் தேன்போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்களோடு கூடவே இறந்து போய் விட்டன! அவற்றை நாம் மறுபடியுஞ் செவி கொடுத்துக்கேட்பது இனி எக்காலத்தும் இயலாது! ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டிருந்தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த சை வல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத் தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப் போனாலும் அவர்களுடைய ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/96&oldid=1584302" இலிருந்து மீள்விக்கப்பட்டது