உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

67

66

மக்களை

17. வறுமை

வறுமையானது தகாத செயல்களைச் செய்யும்படி ஏவுகின்றது; ஆயினும், நேர்மையுள்ளவர்கள் அத்தகைய செயல்களைச் செய்தல் ஆகாது. வறுமை வந்த காலத்திலேதான் அவர்கள் தமது மனநி மனநிலையை லயை உரப் படுத்துதல் வேண்டும். ஒருவன் பசித்து வருந்தினாலும் பிறரைச் சார்ந்து பிழைத்தல் தக்கதன்று.

18. வாழ்க்கையே நாடகம்

"நமது உயிர்வாழ்க்கை முழுதும் ஒரு நாடகமே எனக் கருதுகிறேன். அதில் ஒவ்வொருவனும் தன்னை மறந்து பிறன் ஒருவனைப் போல் நடக்கப் பாடுபடுகின்றான். நாம் நம் முடைய உண்மை நிலைக்குத் திரும்பமாட்டாதவர்களாய்ப் பிறரைப் பார்த்து அவர்களைப் போல் நடப்பதிலேயே உறைத்து நிற்கின்றோம். இஃது எதனை ஒத்திருக்கிறதென்றால், இளஞ்சிறார் தெற்றுவாய் உடைய சிலரைப் பார்த்து, அவரைப் போல் தாமும் தெற்றித் தெற்றிப் பேசுதலையே ஒத்திருக் கின்றது. அங்ஙனம் அச்சிறுவர் தெற்றித் தெற்றி நெடுகப் பேசிவரவே, சிறிது காலத்தில் அவர்களும் தெற்றுவாய் உடையராகின்றனர். முதலிற் பழகிய அத்தீயபழக்கம் பின்னர் எக்காலும் மறக்கப்படாத வேறோர் இயற்கையாய் விடுகின்றது” என்று நாடக நூலாசிரியரொருவர் (Ven Jonson) அறிவுரை புகல்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/100&oldid=1584714" இலிருந்து மீள்விக்கப்பட்டது