உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மறைமலையம் -18

மட்டுப்படாது செல்லுதலால், அவனது கல்விப் பயிற்சியையும் அளவுபடுத்துதல் ஏலாது.

தனக்குள்ள அறிவாற்றல்களை எவ்வாறு ஒழுங்கு படுத்தல் வேண்டும், அவற்றை எவ்வாறு அளவுபடுத்தி நடப்பித்தல் வேண்டும் என்பதனை அவன் எட்டுணையும் அறியான்; அவனது மட்டுப்படா ஆற்றல் அவனுக்கே மாறாய் நின்றது. அவன் அவன் அறிவில் அறிவில் வல்லவனாயிருந்த தொன்று மட்டும் அன்று; பேசுதலிலும் எழுதுதலிலும் அவனை ஒப்பாரும் மிக்காரும் எவருமேயில்லை. எனினும் அவனது கூர்த்த அறிவு வெளியே புலப்படுவதில்லை; அது புலப் படுவது ரு குற்றமாக அவனது பகுத்தறிவுக்குத் தோன் றியது; ஏனென்றால், ஒளிக்கப்பட்டதைவிட ஒளிந்திருப்பதே தீங்கு பயப்பது. அவன் தான் பேசும் மொழிகளை உழைப் L படுத்துப் பேசுவதில்லை. கட்டாயமாக இருந்தால் அல்லாமல், அல்லது ஏதேனும் ஊதியம் வருவதாய்க் காணப் பட்டால் அல்லாமல், அவன்தான் வழக்கமாய்ப் பேசும் பெரும்பாட்டையை விட்டுப் பிசகிப் போவதில்லை. எதனாலெனின், தான் பேசும் பொருளை விளக்குதற்குத் துணையாயின் அல்லது, வெறும் வனப்புக்காக உருவகங்களைக் காட்டிச் சொல்லுதல் ஆகாதென்பது அவன் கருத்து. ஒழுங்காக இருக்கவேண்டுவதொன்றனைத் திரிபு செய்தலும் பிணித்தலும் அளவுக்கு மிஞ்சி வெறிபிடித்தவர் தம்செய்கையேயாமென்று அவன் எண்ணினான்.

உவமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/99&oldid=1584713" இலிருந்து மீள்விக்கப்பட்டது