உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

65

16. கல்வியும் ஓய்வும்

கல்வி கற்பவர்களுக்கு இடையிடையே ஆறியிருத் தலும் ஓய்ந்திருத்தலும் பயன் தருவனவாகும். மக்களின் மனமானது, வளைக்கப்படாதவரையில் வலுவுடையதாய் ருக்கும் ஒரு வில்லின் தன்மையை ஒத்ததாயிருக்கின்றது என்றாலும், ஒருவன் தன் உள்ளத்தின் ஓட்டத்தை எப்போது தடுத்தாளல் வேண்டும், அல்லததனை எப்போது விடுத்தாள வேண்டும் எனப் பகுத்துணர்ந்து நடக்கின்றானோ அதுதான் அவனது உணர்வுக்குச் சிறந்த தன்மையாகும்.

இருவகையிலும் ஒரு கட்டுப்பட்டு நடவாமல் மிகமும் முரமாய் நடக்கும் ஓர் ஆண் மகனை யான் அறிவேன்; அவனுக்கு நடுப்பட்ட நிலைமை என்பதொன்றில்லை; தான் செய்யும் கல்விப் பயிற்சியை எப்போது விட்டுவைக்க வேண்டும், மறுபடியும் எப்போது தொடங்க வேண்டும் என்னும் அறிவும் அவனுக்கில்லை. அவன் ஏதாவதொன்றை எழுதப்புகுந் தானாயின், பகற்பொழுதோடு இராப்பொழுதினையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு, தானாகவே களைத்துக் கீழ்விழும் வரையில், தன்னை நெருக்கிப் பிழிந்த படியாய்ச் சிறிதும் ஓய்வெடாது அதனைச் செய்வன். பிறகு அதனைவிட்டு வேறுமுகமாய்த் திரும்புவனாயின், எல்லா வகையான விளையாட்டுக்களிலும் அவன் ஒரு வரை துறையின்றிப் புகுந்து ஈடுபட்டிருப்பான்; மீண்டும் அவன் நூல்களைக் கையில் எடுக்கும்படி செய்வது எளிதிற் கூடுவதன்று; என்றாலும் எப்படியோ அவன் திரும்ப நூல் ஓதத் துவங்குவானாயின், அம்முயற்சியில் வரவர அழுந்தி அதனோடு உருகி ஒன்றுபட்டுப் போவான். அப்போது அவனுடைய அறிவாற்றல் கள் முற்றும் புதுக்கப்பட்டுத் தோன்றும்; தன்னளவுக்கு மிஞ்சியே தான் விழைந்ததனைச் செய்திடுவன். அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/98&oldid=1584712" இலிருந்து மீள்விக்கப்பட்டது