உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் -18

அவர்கட்குச் சொல்லுங்கள்” எனப் புகன்றது. அங்ஙனம் அது புகன்ற படியே நரி தன் வாயைத் திறந்து, “இஃது எனக்குரியது, உங்களுக்கு உரியதன்று” எனக் கூறவே, சேவல் நரியின் வாயினின்றுந் தப்பிப் பறந்துபோய் ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது. அமர்ந்து, "யான் அவர்களுக்கு உரியேனன்றி, நினக்கு உரியேன் அல்லன்” எனக் கரைந்தது. ஆகவே, நிலையறியாமற் பேசுவது பிசகென்பது இதனால் அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/97&oldid=1584711" இலிருந்து மீள்விக்கப்பட்டது