உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

63

14. சுருக்கமான நல்லறிவு

விலையுயர்ந்த கொழுமையான உணவுகளையே மிகுதி யாய்த் தின்றுவந்தமையால், கை காற் பிடிப்பு நோய் கொண்டு வருந்திவந்த ஒருவர் தமது நோய்க்கு மருந்து கேட்கும் பொருட்டுப், புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர்பாற் சென்றார். சென்று அவர்க்குத் தமது நோயின் தன்மையை எடுத் துரைக்க, அதுகேட்ட அம்மருத்துவர் “நீர் நாடோறும் ஆறு அணாவுக்கு மேற்படாத உணவு கொண்டால் அந்நோய் தீரும்” என்று மொழிந்தார்.

15. நரியும் சேவலும்

ஒரு கால் ஒரு நரி சேவல் ஒன்றிருக்கும் இடத்தண்டை வந்து, அதனைப் பிடித்துக் கொண்டு போவதற்குச் சூழ்ச்சி செய்தது.உடனே தன் அறிவிற்பட்டபடி அது சேவலை நோக்கி, “உன் தந்தைக்குப் பாட்டுப் பாடத் தெரிந்ததுபோல உனக்குப் பாடத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்!" என்றது. அவ்வாறு அது சொல்லியதைக் கேட்ட சேவல் உடனே தன் கண்களை மூடிக் கொண்டு கூவிப் பாடத் தொடங்கியது. அது கண்மூடிய நேரத்தில் நரி அதன் மேற்பாய்ந்து அதனைக் கௌவி எடுத்துக் கொண்டு ஓடலாயிற்று. அவ்வூரில் உள்ளவர்கள் அதனைக் கண்டு, "ஐயோ! நரி நம் சேவலைத் தூக்கிக் கொண்டு போகின்றதே!" எனக் கூவினர். அப்போது சேவல் நரியை விளித்து, "ஐய, ஊரார் சொல்வதை நீங்கள் அறியவில்லையா? தமக்கு உரிய சேவலை நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள் என்கின்றார்களே. யான் உங்களுக்கு உரியேனன்றி அவர்களுக்கு உரியேன் அல்லன் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/96&oldid=1584710" இலிருந்து மீள்விக்கப்பட்டது