உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 18

12. ஒரு கௌதாரியும் குறவனும்

ஒருகால் ஒரு குறவன் ஒரு சிறு காட்டின்கண் வைத்த கண்ணியில் ஒரு கௌதாரிப் பறவை அகப்பட்டுக் கொண் டது. அதனை அவன் அந்தக் கண்ணியினின்றும் எடுத்துத் தன் உணவுக்காகக் கொல்லப் போகையில், அஃது அவனை நோக்கி, 'ஐய என்னைக் கொல்லாமல் விட்டுவிடு! யான் உனக்கு வேலைக்காரனாயிருந்து மற்றைக் கௌதாரிப் பறவைகள்

66

கூட்டம்

அகப்

கூட்டமாய் வந்து உன் வலையில் பட்டுக் கொள்ளும்படி செய்வேன்" என்றது. அது கேட்ட அக்குறவன், "நின் நண்பர்களை எல்லாம் கொன்று, நீ மட்டும் உயிரோடிருக்க எண்ணுகின்றாய்; ஆதலால், நீ விரைந்தொழியக் கடவாய்” என்று விடை பகர்ந்தான்.

13. ஒரு பெண்பிள்ளையும்

பெட்டைக்கோழியும்

நாட்டுப்புறம் ஒன்றில் ஒரு மாது பெட்டைக் கோழி யொன்றனை வளர்த்து வந்தாள். அக்கோழி நாடோறும் ஒரு முட்டை இட்டு வந்தது. இது கண்ட அப்பெண், “எனது கோழி நாடோறும் ஒரு முட்டைதான் இடுகிறது; இனி அது நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டை இடும்படி செய்வேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பிறகு ஒவ்வொருநாளும் முன் கொடுத்ததற்குமேல் இரண்டத்தனை மடங்கு வாற்கோதுமை அதற்கு இரையாகக் கொடுக்கத் தலைப்பட்டாள். இங்ஙனம் அவள் மிகக் கொழுமையான தீனி கொடுத்துவரவே அப் பெட்டைக் கோழி தன் உடம்பினுள்ளே கொழுப்பு மிகுதியாக வரப்பெற்று ஒரு முட்டை தானும் ஈனாமல் மலடாய்ப் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/95&oldid=1584709" இலிருந்து மீள்விக்கப்பட்டது