உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 18

19. ஒரு கிண்ணம் தண்ணீர்

முதலில் ஆடுமேய்க்கும் இடையனாயிருந்து பின்னர்க் கடவுளின் ளின் ருவருளால் அரசியல் நிலைக்கு உயர்த்தப் பட்டுச் செங்கோல் செலுத்திய பண்டைக்காலத்து மன்னன் ஒருவன் (David) தன்மேற் பகைகொண்ட வேறொரு காடுங்கோல் மன்னனாலும் நாகரிகமில்லாக் கொடிய கூட்டத்தாராலும் இருபக்கமும் துன்புறுத்தப்பட்டு, அதனால் தனது அரச வாழ்க்கையைத் துறந்து, தன் அருமைப் பெற்றோர்களைப் பாதுகாவலான ஓரிடத்திற் கொண்டு போய் வைத்துத் தான் மேய்ப்பனாயிருந்தபோது, அறிந்திருந்த ஒரு சுக்கான் கல்மலைப்பாங்கு சென்று அங்குள்ள குகைகளையே தனக்கு உறைவிடமாய்க் கொண்டிருந்தான்.கடவுளின் அருளுக்கு உரியனான இம்மன்னன் இங்ஙனம் ஏழ்மை நிலையை அடைந்

னாயினும், அவனது தெய்வத் தன்மையானது அவன்றன் படைவீரர் பலரை அவன்பால் வருவித்தது; மனத்துயர் கொண்டோரும், கடன்பட்டு நொந்தோரும், மனக்குறை யுடையோரும் அவன்பால் இருத்தலை விரும்பி அவனிடம் வந்து குழுமினர்; இவர்களுட் சிலர் படைஞராய் இருந்த காலத்து வென்றியில் சிறந்து முதன்மை பெற்று பற்று விளங்கி னோராவர். இவர்கள் எல்லாரும் தம் இளைய மேய்ப்ப மன்னன் சொல்வழி நடப்பவராய், எவர்க்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாது ஒழுகினோராவர். அவ்விளைய மன்னனோ மிடிப்பட்ட இந்நிலையிலும் இறைவனை மறவாத வனாய்த் தனது யாழையியக்கிப் பல அருட் செம்பாடல்களை உளங்கரைந்து பாடும் வழக்கம் மேற்கொண்டான். அன்பும் அருளும் ததும்பும் அவ்விசைப்பாட்டுகளைக் கேட்ட அப்படை வீரர்களெல்லாரும் தமது வறுமையையும் துன்பத்தையும் மறந்து, கடவுள்பாற் கசிந்த உள்ளத்தினராகித் தம் மன்னன்பால் நிலைபெற்ற பேரன்புடையரானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/101&oldid=1584715" இலிருந்து மீள்விக்கப்பட்டது