உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

6

69

இம்மன்னனும் இவன்தன் படைஞரும் அடைக்கலம் புகுந்த அவ்வெறுமலைப்பாங்கு கதிரவன் வெப்பத்தால் அழற்சி மிக்கதாயிருந்தது. அம்மலை முகட்டினூடு இருந்த ஒரு பெரும் பிளவின் அடியிடமெல்லாம் உடைந்த கற்பாறைத் துண்டுகள் இறைந்து கிடந்தன. அதன் இருபுறத்தும் செங்குத் தாய் நின்ற சுற்றுச் சுவர்களின் கரை ஓரத்தில் மலையாடுகள் அடிவைப்ப தற்கும் போதுமான இடம் ம் கிடையாது. இத் தன்மைத்தாகிய மலைப் பிளவின் கண் உள்ள ஒரு செங்குத்தான குன்றின் உச்சியிலேதான் அவ்விளைய மன்னன் புகலிடமாய்க் கொண்ட ஒரு கொடுமுடி இன்றும் காணப்படுகிறது. அதன் குறுகிய வாயினுள்ளே நுழைந்து சென்றால், படியடுக்குகள் உடைய குகையொன்று சிறுகிய வழிகளும் பெருகிய மண்டபங்களும் மாறிமாறி வாய்ந்தனவாய் அமைந்திருத்தல் காணப்படும். என்றாலும், அவ்விடம் நெருக்கமாய் வெப்பம் மிக்கு இருந்தது. ஒரு செடிதானும், மரந்தானும் இல்லாமல், ஆள்வழக்கம் அற்றுப் பாழாய் வெய்தென நிற்கும் அவ்விடத்தைத் தனக்குப் புகலிடமாய்க் கொண்ட அவ்இளைய மன்னன், தான் முன்னே அரசாண்ட இனிய செழுமையான நாட்டையும், அதன்கண் ஆங்காங்குப் பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் கோதுமைப் பயிர் களையும், சன்னல் பின்னலாய்ப் படர்ந்திருக்கும் கொடி முந்திரிக் கொடி களையும், குளிர்ந்த தீஞ்சுவைத் தண்ணீர் சுரந்து ஒழுகப் பெறும் வாவிகளையும், அவ்வாவிகளின் நீர்பாய் மடை களின் பாங்கரிருந்து தான் முன்னர் இறைவன் மேல் இசைப்பாட்டுகள் மிழற்றின வகைகள் எல்லாம் நினைந்து பெருமூச்செறிந்தான்! எறிந்து ஐயோ! யான் இருந்து இசைமிழற்றின அந்நீர் நிலையிலிருந்து ஒரு ரு கிண்ணம் தண்ணீர் எவரேனும் எனக்குக் கொணர்ந்து கொடார்களா!” என்று ஆற்றாது கூறினான்.

66

அச்சொற்கேட்ட அவன்றன் படைஞரில் மூவர் தம் மன்னனது வேட்கையை நிறைவேற்றத் தீர்மானித்தனர். அவர்கள் புகலிடமாய்க் கொண்ட அம்மலையரணுக்கும், அரசன் அத்துணை ஆவலொடு வேண்டிய நீரினையுடைய வாவிக்கும் இடையே அவர்க்குப் பெரிதும் தீங்கிழைத்த கொடிய காடவர் கூட்டம் படை கொண்டிருந்தது. என்றாலும், தம் தலைவன் மேல் அவர்கள்

வைத்த பேரன்பானது அப்பகைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/102&oldid=1584716" இலிருந்து மீள்விக்கப்பட்டது