உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

  • மறைமலையம் -18

கூட்டத்திற்கு அஞ்சுமா! உடனே அம்மூவரும் தாமிருந்த உச்சிமலைப் பிளவினை விட்டுக் கீழிறங்கினர். எப்படியோ அவர்கள் அப்பகைவர்தம் படையினூடே சென்று, தம்மரசற்கு விருப்பமான நீரூற்றிலிருந்து நீரை முகந்தெடுத்து, அதனைச் சுமந்த வண்ணமாய் அப்பகைவர் படையினூடே தானே திரும்பிப் போந்து, தமது மலையுச்சியின் கொடுமுடியில் அதனைக் கொணர்ந்து சேர்ப்பித்தனர். தம் தலைவனது வேட்கையை ஆற்றும் பொருட்டுத் தம்முயிரையும் பொருட் படுத்தாது பகைவரூடு சென்று அவர்கள் அந்நீரினைக் காணர்ந்த செயற்கருஞ் செயலை நோக்கவே, அம்மேய்ப்ப அரசனது நெஞ்சம் நெக்குருகலாயிற்று. அத்துணை அரிதிற் போந்த அந்நீர் மிகவும் புனிதமானதென்றும், அதனைத்தான் பயன்படுத்திக் கொள்ளுதல் தகாதென்றும் அவன் எண்ணினான். எண்ணி அந்நீரினை எடுத்து இறைவன் அருட்குறி மேற் சொரிந்து, தன் பேரன்பிற்கு அறிகுறியான கண்ணீரும் வார்ந்தொழுகிப் பேரின்ப வெள்ளத்தில் படிந்திருந் தான்

என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/103&oldid=1584717" இலிருந்து மீள்விக்கப்பட்டது