உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

71

20. ஒரு பொன் மீன்

பேரன்பினனான அவ் இளைய ளைய மன்னன் நம் தமிழ் நாட்டுக்கு அயலதான மேல்நாட்டில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவன் ஆவன். அவனை யொப்ப இறைவன் பாற் பேரன்பு பூண்டு ஒழுகினோர் இத்தமிழ் நாட்டகத்தும் பலர் பழங்காலத்திருந்தனர். அவருள் ஒருவர் செய்த செயற்கருஞ் செயலை ஈண்டு எடுத்துக்காட்டுவாம். சோழ வேந்தர்களின் தலைநகரங்களில் ஒன்றான நாகபட்டினம் என்பது கடற்கரையை அடுத்துள்ளது. அந்நகரத்தின் கடற் கரையோரத்தின்கண் உளதாகிய செம்படவர் குப்பத்தில், இன்றைக்கு ஓராயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் செம்படவர் தலைவனான ஒருவர் எல்லாம் வல்ல இறைவன் பால் அளவிறந்த அன்புடையராய் உயிர்வாழ்ந்து வந்தனர். அவர் தம் ஏவல்வழி நிற்கும் செம்படவர்களை எல்லாம் கடல் மேல் கட்டுமரங்களில் செலுத்திக் கொண்டு சென்று, வலைவீசுவித்துப் பிடிப்பிக்கும் மீன்குவைகளை விற்றுப், பெற்ற பொருளைத் தம்மவரும் தாமுமாகப் பங்கிட்டுச் செல்வம் உடையராயிருந்தனர்.

இவர் மீன் பிடிக்கும் வாழ்க்கையில் இருந்தனராயினும், எல்லாம் வல்ல இறைவன் நிலையினை உணர்ந்து, அவன் திருவடிக்கண் அழுந்தின அன்பு வாய்ந்தவர். ஆகவே, தம் மவர் பிடித்துக் கொணரும் மீன் தொகுதியுள் ஒரு தலை மீனையெடுத்து அஃது இறைவனுக்குரியதென நினைத்து, அதனைக் கடல்நீரில் மீண்டும் செல்கவென விட்டுவருதலை நாடோறும் மாறாமல் செய்து வந்தார்.

இங்ஙனம் செய்து வருகையில், ஏது காரணத்தாலோ மீன்கள் மிகுதியாய் அகப்படாமல் செம்படவர் தமது வலை வளம் சுருங்கிப் பட்டினியும், பசியுமாகக் கிடந்து துன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/104&oldid=1584718" இலிருந்து மீள்விக்கப்பட்டது