உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் - 18

புறலாயினர். அங்ஙனம் தம்மவர் துன்புறுங்காலத்தும், அவர்தம் தலைவரான அன்பர் முதல் வலையில் ஒரு மீனே அகப்பட்டாலும், அஃது இறைவற்கே உரியதென அன்பொடு நினைந்து, அதனைக் கடலின்கண் உயிரொடு விடுத்து வந்தார். நாளேற நாளேற இவரது செல்வமும் சுருங்கிவிட, இவர் உடல் தளர்ந்து வருந்தினாலும், மனம் சிறிதும் தளராராய் மகிழ்ந்து, முதலில் அகப்படும் ஒரு மீனையும் ஒவ்வொரு நாளும் கடலின்கண் உய்த்தலில் சிறிதும் வழுவாது ஒழுகலாயினர். கடைமுறையாக வீசுவித்த பல வலைகளுள் ஒரு 6 வலையிற்பட்ட ஒரு மீனைத் தவிர, வேறொரு சிறு மீன் தானும் வேறு வலைகளுள் அகப்பட்டிலது. எனினும், ஒரு வலையில் அகப்பட்ட அவ்வொரு மீனையும் அவர் மிக்கதொரு களிப்புடன் எடுத்துப் பார்க்க, அஃது ஒரு பெரிய தேயத்தையே விலைகொளத்தக்க சுடர்விரி பசும்பொன் வடிவினதாய்த் திகழ்ந்தது.

அவர்

ன்

அப்பொன்மீன் அகப்பட்ட நேரம் எத்தகைய மன வுறுதியுடையார் மன நிலையினையும் கலைக்கும் வலிமை வாய்ந்தது. செம்படவர் தலைவனான அவ் அன்பரோ மிகவும் மிடிபட்டுத் தம் குடும்பத்தவரோடு பல நாட்கள் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து இடருழந்து வருகின்றார். தம்முடைய துன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாது, தமது ஆளுகைக் கீழுள்ள செம்படவர் படும் துயரத்தைக் கருதும் அருள் மாட்சியுடையராகலான் பொருட்டாகவாவது அப்பொன்மீனை விலை செய்து, அவர் அச்செமபடவரது மிடிவாழ்க்கையை மாற்றப் பாலார். மற்று, அச்செம்படவர் களோ தாங்குதற்கரிய தமது வறிய நிலையினைக் கருதித் தம் தலைவன் இப்போதாயினும் இவ்வொரு மீனை விற்றுத் தம்மைப் பாதுகாப்பரோ, அன்றி என்றும்போல இதனையும் கடற்கண் விடுத்திடுவரோ என்னும் ஐயத்தால் ஏங்கிய நிலை யினராய், அவர் இனிச் செய்யப் போவதனை எதிர்பார்த்துக் இமையாது நிற்கின்றனர். அப்பொன் மீனைக் கையிலெடுத்த சில்லிமைப் போழ்தில் எத்தனையோ பல எண்ணங்கள் மின்னொளியினும் கடுகி அவர்தம் தலைவன் உள்ளத்தை ஊடுருவிச் சென்றன. “என் கீழ்க்குடிகளான இச்செம்படவர் எத்தனையோ பல நாட்களாக வலைவளந் தப்பிப் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வருகின்றார்கள்!

கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/105&oldid=1584719" இலிருந்து மீள்விக்கப்பட்டது