உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

73

என்கொள்கை தவறாமல், நாடோறும் அகப்படும் ஒரு மீனையும் இறைவற்கென்று கடலின்கண் யான் விடுத்து வருதலைக் கண்டும் என்னை வெறுத்திலர்! இவ்வொரு மீன் விலையால் இவர்கள் எல்லாரின் மிடியும் அற்றுப்போவது திண்ணமே. ஆனாலும், இஃது இறைவற்கு உரியதன்றோ? இதனை விற்றற்கும், இவர்களைப் பாதுகாத்தற்கும் யான் யார்? யான் பிறக்கும் முன்னும் யான் இறந்த பிறகும் இவர்களைப் பாதுகாத்தவர், பாதுகாப்பவர் கடவுளா? யானா? என் மனைவி மக்கள் பெற்றார் உற்றாரெல்லாம் என்கீழ்க் குடிகளைப் போல் அல்லர்; முற்றும் என்னைச் சார்ந்து பிழைப்பவர். இவர்கள் பொருட்டு இதனை விற்றல் இறைவன் திருவுளத்திற்கு இசையுமா? கண்ணெதிரே என் உதவியைப் பெரிது வேண்டி நிற்கும் இவர்கட்கென்று இதனைப் பயன்படுத்தாமல் கட்புலனாகாக் கடவுட்கென்று தனைக் கட லின்கண் டுத்தல் பயன் தருமா? இத்தனை நாளாக மிடிப்பட்டு வருந்தும் இவர்கள் அனைவரின் நிலையையும் ஓராமலே இறைவற்கென்று அரிது அகப்பட்ட ஒரு மீனையும் விடுத்து வந்த யான் இன்றைக்கு மட்டும் இப்பொன்மீனைக் கண்டு பேரவாக் கொண்டு இறைவனை மறந்து இவர்களை நினைதல் பிழையன்றோ? இவர்கள் துயர் ஒருபுறம் இருக்க, எனக்கு அரிதிற் கிடைத்த இம்மக்கள் யாக்கை இறைவன் தந்ததன்றோ? இதனைப் பாதுகாவாது, யான் ஏதோ விடாப்பிடியாக் கொண்ட ஒரு கொள்கைக்காக மிடியால் இதனை அழித்து டுதல் ஐயன் அருளுளத்திற்கு அடுக்குமா? எனக்கும் என்னைச் சேர்ந்தார்க்கும் என்கீழ்க்குடிகட்கும் பிறர்க்குமெல்லாம் வந்த இத்தீரா வறுமையினை வ்வொரு பொன் மீன் தீர்த்து எல்லாரையும் இன்பவாழ்வில் வைக்குமென்றால், இதனைக் கடலின்கட் போக்குதல் தக்கதாமா? நல்லது, இவ்வெல்லார் வறுமையையும் தீர்த்து, அவர்கள் எல்லாரையும் பாதுகாத்தல் வேண்டி, என்கொள்கைக்கு மாறாக இப்பொன்மீனை விற்கத் துணிவேனாயின், இதனை விற்கப் போம்போதோ, விற்றுப் பொருளொடு திரும்பும் போதோ, திரும்பி எல்லார் வறுமையும் தீர்க்கும்போதோ, அது தீர்ந்து எல்லாரும் களித்திருக்கும் போதோ ஒரு கடும் புயற்காற்றும் விடாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/106&oldid=1584720" இலிருந்து மீள்விக்கப்பட்டது