உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

87

27. ஓநாயும் கொக்கும்

ஓர் ஓநாயானது தன் தொண்டைக்குக் குறுக்கே மாட்டிக் கொண்ட ஒரு எலும்பை எடுத்து விடும்படி, அங்கும் இங்குமாய் மிகவும் துன்புற்று ஓடித் தான் எதிர்ப்பட்ட ஒவ்வொரு விலங்கையும் கெஞ்சிக் கேட்டது. அங்ஙனம் கெஞ்சிக் கேட்கும்போது எல்லாம் தனக்கு அவ்வுதவியைச் செய்யும் உயிர்க்குத் தான் தன்னாலான கைம்மாறு ஒன்றும் செய்வதாகக் குறிப்பித்தது. கடைசியாக ஒரு கொக்கு அதன் துன்பத்தையும், வேண்டுகோளையும் சொல்லுறுதியையும் கண்டு மனம் இரங்கித், தனது நீண்ட கழுத்தோடு கூடிய அலகை அவ் ஓநாயின் தாண்டை ள் து ணி வாக நுழைத்து, அங்கே மாட்டிக் கொண்டிருந்த எலும்பை வெளியே ழுத்துவிட்டது. அவ்வாறு செய்த பிறகு அது தனக்கு ஓநாய் கைம்மாறாகத் தருதற்கு இசைந்ததனைத் தரும்படி அடக்க மாய்க் கேட்டது. உடனே அவ் ஓநாய் பல்லை இளித்துக் கொண்டு, “நன்றிகெட்ட உயிரே! ஓர் ஓநாயின் வாய்க்குள்ளே நுழைந்த உனது கழுத்துத் துண்டாக்கப்படாமல் நல்லபடியாய் வெளியே வந்ததே போதாதோ! இதனிலும் சிறந்த கைம்மா றொன்றும் உனக்கு வேண்டுமோ!” என்று சினத்துடன் கூறியது.

க்கு

தீயவர்கட்கு உதவி செய்பவர்கள், அவ்வுதவிக்குக் கைம்மாறாக அவராற் பழிக்கப்படுவரே அன்றி வேறு எதிருதவி ஒன்றும் பெறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/120&oldid=1584734" இலிருந்து மீள்விக்கப்பட்டது