உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 18

28. ஒரு பருந்தும் சில புறாக்களும்

சில புறாக்கள் நெடுநாளாக ஒரு பருந்துக்கு அஞ்சிய படியாய்க் காலங்கழித்து வந்தன. அவை தாம் உறையும் கூட்டை விட்டுத் தொலைவில் செல்லாமல் அங்கு அருகிலேயே மேய்ந்து கொண்டு விழிப்பாய் இருந்தமையால், அவை அப்பருந்தின் பிடியுள் அகப்படாமல் உயிர்தப்பி வாழ்ந்தன. அப்பருந்தோ தனது விருப்பம் நிறைவேறாமை கண்டு, அவற்றைத் தனக்கு இரையாக்கிக் கொள்ள ஒரு சூழ்ச்சி செய்து அப்புறாக்களை நோக்கி, “நீங்கள் ஏன் இவ்வாறு எந்நேரமும் கவலையிலும் கலக்கத்திலும் நாட்கழித்து வருகின்றீர்கள்? நீங்கள் என்னை உங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டால், எத்தகைய இடையூறும் உங்களுக்கு வராமல் உங்களைப் பாதுகாப்பேன்,” என மொழிந்தது. அப்பருந்தின் சொற்களை நம்பிய அப்புறாக்கள், அதனைத் தமக்கு அவ்வாறே அரசனாக்கிக் கொண்டன. அங்ஙனம் அரசனான பிறகு அப்பருந்து ஒருமிக்க அவைகளை இரையாக்கிக் கொள்ளாமல், நாடோறும் ஒவ்வொரு புறாவாகப் பிடித்துத் தின்று வந்தது. நாளடைவில் எல்லாப் புறாக்களும் இங்ஙனம் அதற்கு இரையாகிப் போகக் கடைப்படியாக எஞ்சிநின்ற புறவு அதற்கு இரையாகிப் போகும் தருவாயில், 'ஆ! நாங்கள் செய்த ஏற்பாட்டுக்குத் தக்கது எங்கட்குக் கிடைத்தது!’ என்று சொல்லி உயிர் துறந்தது.

66

L

ஆகவே, கொடியோன் ஒருவனைத் தாமாகவே தெரிந் தெடுத்து அவற்குப் பெருவல்லமையைத் தந்து வைப்ப வர்கள், பிறகு அவனால் துன்புறுத்தப்பட்டால், அதற்காக அவர்கள் வியப்படைதல் எதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/121&oldid=1584735" இலிருந்து மீள்விக்கப்பட்டது