உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

89

29. இரண்டு பண்டப் பைகள்

ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்கவிட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்ட ங்களே நிறைந்திருக்கின்றன. அவ்விரண்டில் அவன் மார்பின் முன்னே தொங்கும் பையில் பிறருடைய குற்றங் களே நிரம்பியுள்ளன. அவற்குப் பின்னே அவன் முதுகில் தொங்கும் பையிலே, அவனுடைய குற்றங்களே நிறைந்திருக் கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கண்பார்வை உடையராயும், தம்முடைய குற்றங் களைப் பாராக் கண்ணில் குருடராயும் இருக்கின்றனர்.

.

30. குடியானவனும் பாம்பும்

மழைக்காலத்தொருநாள் ஒரு குடியானவன் தன் வீட் டுக்குத் திரும்பி வருகையில் வேலியருகே ஒரு பாம்பு குளிரால் விறைத்துக் குற்றுயிருங் கொலையுயிருமாய்க் கிடத் தலைக் கண்டான். கண்டவன் அதன்பால் இரக்கம் உடை யோனாய், அதனையெடுத்துத் தன் மார்பில் அணைத்த படியாய்த் தன் வீட்டுக்குக் கொணர்ந்து, அடுப்பருகில் வைத்து அதற்குச் சூடேற்றினான். உடம்பில் சூடேறியவுடன் அது சுறுசுறுப்பு வாய்ந்ததாகி,அக்குடிசை வீட்டிலிருந்த அவன் பிள்ளைகள் மேல் சீறிச் செல்லலாயிற்று. அதுகண்ட அக் குடியானவன் அந்நச்சுயிருக்குத் தான் இரங்கியது தப்பாதல் உணர்ந்து, உட ஒரு தடியால் அதனை அடித்துக்

கொன்றான்.

உடனே

"புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/122&oldid=1584736" இலிருந்து மீள்விக்கப்பட்டது