உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் 18

31. உறை நீர்க்கட்டிமேல் உடல் பருத்த மாது

ருசியா தேயத்தின் வடபகுதிகளில் பனியின் கடுமை மிகுதியாய் உண்டு. அதனால் அந்நாட்டின் நிலமும் ஏரியு மெல்லாம் பனி நிறைந்து இறுகி இருக்கும். பனிக்கட்டி நிறைந்த நிலமும் ஏரியும் கெட்டியாய் வழுவழுப்பாக இருத்தலால், அவற்றின்மேல் அந்நாட்டு மாந்தர்கள் சறுக்கி நடக்கும் விளையாட்டு விளையாடுதல் வழக்கம். ஒருகால் உடல்பருத்த மாது ஒருத்தி ஓர் ஏரியின் தண்ணீர் உறைந்து கெட்டியாகி அதன் மேற்பரப்பு வழுவழுப்பாய் இருக்கப் பார்த்து, அதன்மேற் சறுக்கி விளையாடச் சென்றாள். அங்ஙனம் அவள் விளையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலெல்லாம் கால்வழுக்கி அதன்மேற் பொதீரென வீழ்ந்தாள். வீழ்ந்தவள் தன் உடலின் சுமையால் எழுந்து நிற்கமாட்டாமல், அப்பனிப்பரப்பின் மீதே துயரத்தோடு உட்கார்ந்திருந்தனள். அப்போது அவள் பக்கமாய் அங்கே சறுக்கி விளையாடிக் கொண்டு வந்த ஒருவன் அவளைக் கண்டு இறங்கி, அவள் எழுந்திருக்குமாறு தூக்கி உதவி செய்து, அம்மே, இதுதான் முதன்முதலாக நீங்கள் சறுக்கி விளை யாடியது போலும்!" எனக் கூறினான். அதற்கு அம்மாது, இல்லை, இது முதன்முறை அன்று; இதுதான் எனக்குக் கடை சிமுறை!” என்று மொழிந்து அவருக்கு நன்றி று செலுத்திப் போனாள்.

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/123&oldid=1584737" இலிருந்து மீள்விக்கப்பட்டது