உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

91

32. பன்றி எண்ணிக்கை

ருபது பன்றிகள் வைத்து வளர்த்து வந்த ஓர் ஒட்டன் ஒருநாள் தன்கீழ் வேலைபார்க்கும் ஒருவனையழைத்துப்,பன்றிக் குடிசையில் பன்றிகள் இருபதும் இருக்கின்றனவா, என்று பார்த்துவரும்படி ஏவினான். அவ்ஏவலன் அங்ஙனமே சென்று, திரும்பி முகத்திலே திகைப்புக்குறி தோன்றத் தன் தலைவனிடம் வந்தான். வந்தவனைத் தலைவன், “நல்லது, பன்றிகள் எல்லாம் தவறாமல் இருக்கின்றனவா?” என வினவினான். “ஆ! ஐயா, L பத்தொன்பது பன்றிகளைப் பிசகாமல் எண்ணினேன்; ஆனால், ஓர் இளம்பன்றி மிக விரைந்து ஓடினமையால், அதனை யான் எண்ணக் கூடவில்லை" என்றான். அச்சொற் கேட்ட தலைவன் அவ் ஏவலனது மடமையைப் பார்த்து நகை புரிந்தான்.

33. திறமையுள்ள நாய்

ஒரு

ஒருகால் ஒரு செல்வர் தாம் வளர்க்கும் நாயைத் தமது பக்கத்தில் வைத்துக்கொண்டு தமது குதிரை வண்டி யில் கடைக்குச் சென்றார். கடையருகே சென்றதும், வண்டியை நிறுத்தி, நாயை வண்டியிலேயே இருக்கும்படி செய்துவிட்டு அவர் அக்கடையினுள்ளே நுழைந்தார். அப்போது குதிரை தெருவில் எதனையோ கண்டு மிரண்டு, வண்டியை இழுத்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயிற்று. அதன் கடிவாள வார் தெருநெடுகக் கூடவே இழுப்புண்டது. வண்டிக் குள்ளிருந்த நாயோ தன் வண்டிக்குதிரை தலைகால் தெரியாமல் ஓ டுதலைக் கண்டதும் திடுமெனக் கீழே குதித்து, நிலத்தே ழுபட்டுச் செல்லும் கடிவாள வாரைத் தனது வாயினாற் கௌவிப் பிடித்துக் கொண்டது. து. குதிரை சிறிது வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/124&oldid=1584738" இலிருந்து மீள்விக்கப்பட்டது