உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

  • மறைமலையம் -18

அந்நாயையும் இழுத்துச் சென்றதாயினும், நாய் தான் கௌவிய கடிவாள வாரை விடாப்பிடியாய்ப் பிடித்து இழுத் தமையால் குதிரை கடைசியாக நிற்க வேண்டுவதாயிற்று. ங்ஙனம், அந்நாய் செய்யாதிருந்தால், அக்குதிரை தான் வெருண்டோடும் ஓட்டத்தால் தான் இழுத்துச் செல்லும் வண்டியை எங்காயினும் மோதிச் சுக்கல்சுக்கலாய் உடைத் திருக்கும்; தானும் எங்காயினும் தடுமாறி விழுந்து கால் முறிந்திருக்கும். இடர்ப்பட்ட நேரத்தில் தன் நாய் செய்த இப்பேருதவியை நினைந்து நினைந்து வியந்து அதன் தலைவன் அதனைப் பெரிதும் பாராட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/125&oldid=1584739" இலிருந்து மீள்விக்கப்பட்டது