உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

93

34. பழக்கத்தின் வலிவு

இவ் இந்திய நாட்டின் ஒரு கடற்கரைப் பக்கத்து மேட்டுக் குப்பத்தில் உயிர்வாழும் கரையாளப்பெண்கள் சிலர் தாம் கொண்டுபோன மீன்களை ஓர் அங்காடியில் விற்பனை செய்து விட்டுத், தமது இல்லம் நோக்கி மாலைப் பொழுதில் திரும்பி வருகையில், இடியும் காற்றும் மழையும் வந்துவிட்டன. நடு வழியில் நடு வழியில் இவ்வாறு நேரவே, அவர்கள் அவ்வழியின் ஓரமாய் இருந்த ஒரு பூந்தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அத்தோட்டக்காரன் அப்பெண்கள் மழை யிலும் காற்றிலும் அகப்பட்டு வருந்துதல் கண்டு கொஞ்சம் இரங்கித், தனது ஓலை வீட்டினுள்ளே நறுமணம் கமழும் மலர்கள் குவிக்கப்பட்டுள்ள ஓர் அறையின் ஒரு பக்கத்தே அவர்கள் தங்கியிருக்கும்படி உதவி செய்தான். சுமைசுமந்து நடந்தமையால் அலுப்புற்ற அச்செம்படவ மாதர்கள் உறங்கு வதற்காகக் கீழே படுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த மலர்க் குவியலிலிருந்து எழுந்த மணம் அவர்களது மூக்குக்குப் பிடிக்காமையால் அவர்கள் தூங்கக் கூடவில்லை. சிறிது நேரம் வரையில் பார்த்துவிட்டுப், பிறகு அப்பெண்கள் முடைநாற்றம் நாறும் தம்முடைய மீன் கூடை களைக் கொணர்ந்து தமது மூக்கருகே வைத்துக் கொண்டு நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாயினர். பழக்கம் கொடிய தென்பது இதனால் நன்கு புலப்படுகின்றதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/126&oldid=1584740" இலிருந்து மீள்விக்கப்பட்டது