உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் -18

35. அருளுடை ஊழியம்

ஏழைப் பெற்றோர்களுக்குப் பிள்ளையாய் பிறந்த பாரி என்னும் பிரஞ்சுக்கார இளைஞர், பாரிசு மாநகரத்திலுள்ள மருத்துவக்கழகத்தில் கலைபயின்று தேர்ந்தபின் ஓர் ஏனாதி மருத்துவரின் கீழ் மருத்துவ ஊழியம் செய்ய அமர்ந்தனர். அமர்ந்து சிறிது காலம் சென்ற பின், தனது நாட்டுப் படை ஞர்களுக்குப் புண் மருத்துவம் பார்க்கும் தொழிலில் அவர் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில், அதாவது அவர் உயிர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில், வெடிகுண்டுபட்ட படை ஞரின் புண்களுக்குக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைவிட்டு, அவற்றை ஆற்றுவது வழக்கமாய் நடந்து வந்தது. முன்னமே வெடிகுண்டுகளால் துளைக்கப் பட்டு

ஆற்றொணாத் துயர் உழக்கும் படைஞரின் காயங் களுக்குக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைச் சுடச்சுடச் சொரிந்தால், அது பின்னும் அவர்கட்கு எவ்வளவு கொடிய துன்பத்தைத் தந்திருக்கும்! இத்தகைய அருள் இல்லாக் கொடிய மருத்துவத்தைத் தமது கண்ணெதிரே கண்ட பாரி என்னும் அவ்விளைஞர்க்கு நெஞ்சம் நீராய் உருகியது! இக்கொடிய முறையை அறவே ஒழித்துவிட்டுப், படைஞர்க்குத் துன்பம் பயவாமல் செய்யும் மருந்து முறை எதுவென்று ஆராய்வதில் அவரது உள்ளம் இரவும் பகலும் ஈடுபட்டது. இரக்க நெஞ்சம் வாய்ந்தாரது எண்ணம் நிறை வேறுதற்கு இறைவனே துணை நிற்பன். ஒருநாள் வழக்கம்போலப் படைஞரின் புண்களுக்கு இடும்பொருட்டு எடுத்துக் காய்ச்சிய எண்ணெய் எல்லார்க்கும் போதாமல் ஒரு சிலர்க்கே போதுமாய் இருந்தது. அதனால் மற்றைப் பலரின் காயங்கள் எண்ணெய் இடாமலே விடப் பட்டன. அங்ஙனம் எண்ணெய் இன்றி விடப்பட்டவர் களைப் பாரி மருத்துவர் அடுத்த நாட்சென்று உற்று நோக்குகையில் எண்ணெய் இடப்பட்டவர்களை விட அஃது இ அஃது இடப்படாதவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/127&oldid=1584741" இலிருந்து மீள்விக்கப்பட்டது