உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

95

களே நல்ல நிலையில் இருக்கக் கண்டார். அது முதல் கொதிக்கும் எண்ணெயை இட்டுக் கட்டும் அக்கொடிய முறையை ஒழித்து, வேறு இனிய வகைகளால் ஆற்றும் முறைகளைக் கையாண்டு, அவர் படைஞரின் புண்களை இனிதாக ஆற்றியதுடன், தாம் கையாண்ட இ னிய புதுமுறைகளை விளக்கியும் அவர் அரியதொரு நூல் இயற்றினார்.

விரைவில்

இன்னும் அக்காலத்தில் கைகால் முறிந்துபோன படைஞர்க்கு, முறிந்த உறுப்புகளைத் தறித்தபின், மிச்சமாய் நிற்கும் உறுப்பின் முனைகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, அவற்றைத் தீய்க்கும் அறக்கொடிய மருத்துவமும் வழக்கமாய் நடந்து வந்தது! உயிரைப் பெருந்துன்பத்தில் படுப்பிக்கும் இக்கொடிய முறையைக் கேட்பினும் எம் குலை நடுங்குகின்றது! அதனை நேரிருந்து கண்ட மெல்லிய உள்ளத் தினரான பாரி மருத்துவர்க்கு அக்கொடுமை எவ்வளவு துடிதுடிப்பினைத் தந்திருக்கும்! இக்கொடிய முறையினையும் அவர் உடனே நிறுத்தித், தறிபட்டு எச்சமாய் நிற்கும் உறுப்புகளின் இரத்த நரம்புகளிலிருந்து இரத்தம் வெளியே பெருகி விழாதபடி அவைகளைப் பட்டுக்கயிறு கொண்டு கட்டி மருந்திட்டு இனிதாக விரைவில் ஆற்றினார்.

இன்னும் ஒரு கால் ஒரு மறவர் தமது உடம்பிற் பத்து ங்களில் கத்தி வெட்டுப் பட்டு உணர்விழந்து கிடந்தார். அவரைக் கண்ட பிறர் அவர் இறந்து போனாரெனவே கருதி, அவரைப் புதைத்து விடுவதற்கு வேண்டும் ஏற்பாடுக ளெல்லாம் செய்யலாயினர். ஆனால், அம்மறவரைச் சென்று உற்றுநோக்கிய பாரி மருத்துவரோ, அவர்க்கு உயிர் போக வில்லை என உறுதிமொழி புகன்று, சிறிது நேரத்தில் எல்லாம் அவரை ரை உயிர் உயிர்ப்பித்து, அவருடைய வெட்டுக் காயங்களையும் சில நாட்களில் ஆற்றினார்.

இங்ஙனம் எல்லாம் பாரி மருத்துவர் தமக்குச் செய்து வந்த அருள் மருத்துவ முறைகளுக்காக நன்றி செலுத்த விழைந்த அப்படைஞர்கள் தாந் தாமும் மனம் உவந்து கொடுத்த பொருளைத் திரட்டித், திரட்டிய பெரும் பொருளை அவர்க்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/128&oldid=1584742" இலிருந்து மீள்விக்கப்பட்டது