உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

97

மனத்திட்பத்துடனும் தான் ஒருத்தியே அக்கோட்டையின் பல விடங்களிலும் தோன்றித்தோன்றி நின்று பகைவரை மிகவும் அச்சுறுத்தினள்.

மறுபடியும் இரண்டாண்டுகள் கழித்து அவ் இருக் கோய மக்கள் அக்கோட்டையைத் தகர்க்க வந்தபோது, அக்கோட்டைத் தலைவரின் மகளான பதினான்கு ஆண் டுடைய சிறுமி ஒருத்தியே, அவர்கள் உள்நுழைய ஓர் அடி எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ஓடிச் சென்று அதன் வாயிற் கதவைச் சாத்திச் செவ்வையாக அடைத்து வைத்தவள் ஆவாள். இந்தச் சிறுமியும் ஒரு மறவரும் அல்லாமல் பிறர் எவரும் அதனை அப்போது காத்தற்கு அங்கிலர். அங்ஙனமிருந்தும், அச்சிறுமி வேளைக்கு வேளை தன் உடையை மாற்றி, அக் கோட்டையினுள் பல முகத்தும் சுற்றிச் சுற்றிச் சென்று, பகைவர்கள் மேல் துப்பாக்கிக் குண்டுகளை நேரமும் குறியும் தவறாமல் ஏவி வந்தமையால், உள்ளே ஒரு பெரும்படை யிருந்து தம்மை எதிர்ப்பதாகவே கருதி, அப்பகைவர்கள் நெஞ்சம் தளர்ந்து வெற்றி பெறாமல் மறித்துத் திரும்பிப் போயினர். இங்ஙனமாக அச்சிறுமி செய்த செயற்கருஞ் செயலன்றோ, அவ்அரணத்தைக் காப்பாற்றியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/130&oldid=1584744" இலிருந்து மீள்விக்கப்பட்டது