உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

  • மறைமலையம் -18

37. மறைபொருட் காட்சி

1725-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசிய மாது ஒருத்தியைப் பற்றிய செய்தியானது, இயற்கைப் பொருள் அறிஞர்க்குப் பெருந்திகைப்பையும் பெருங்குழப்பத்தையும் உண்டு பண்ணியது. அம்மாதுக்கு மறைந்துள்ள பொருள்களைக் கண்டறிந்து உரைக்கும் ஆற்றல் நிரம்ப உள்ளதென்னும் செய்தி எங்கும் பரவியது. அந்த அம்மை வேறோர் உதவியும் நாடாது தன் கண்களால் நிலத்தை உற்றுநோக்கிய அளவில், அந் நிலத்தின் கீழ் உள்ள மண்ணடுக்குகளையும், அவை ஒ ன் று க் கொன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் சிறிதும் பிழைபடாமற் சொல்லிவிடுவள். அது மட்டுமே அன்றி, அவள் ஒருவரது உடம்பை உற்றுப் பார்ப்பாளாயின், அவ் வுடம்புக்குள் ஓடும் இரத்தத்தையும், இரத்த நரம்புகளையும், எலும்புகளையும், உள்ளே அங்கங்கு நோய்ப்பட்டிருக்கும் இடங்களையும் தெளிவாய்க் கண்டு, அவைகளைப் பிறர்க்கு நன்கெடுத்துரைப்பள். கருக்கொண்டிருக்கும் மங்கையர் அவள்பால் சென்று, தமக்குப் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ என்பதைத் திட்டமாய்த் தெரிந்துகொள்வர்; பிறந்த பிள்ளையும், அவள் முன் அறிந்து சொன்னபடியேதான் இருக்கும்.

அஞ்ஞான்றிருந்த போர்த்துக்கல் தேய அரசர் தாம் புதிதாகக் கட்டுவித்த அரண்மனைக்கு வேண்டிய அளவு நல்ல தண்ணீர் பெறுதற்பொருட்டுப் பல இடங்களை அகழ்ந்து பார்த்தும் தண்ணீர் கிடைத்திலது. அதனால் அவர் உள்ளங் கலங்கி வருந்துகையில், அறிந்தார் சிலர் சொல்லக் கேட்டு, மேற்குறிப்பிட்ட மாதைத் தம்பால் வருவித்துத், தமதரண் மனைக்கு வேண்டுமான செழும் புனல் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுக என வேண்ட, அவளும் மிகுந்த தீம்புனல் ஊறும் ஒரு நீர்ஊற்று நிலத்தின் கீழ் இருக்கும் ஓரிடத்தைச் சுட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/131&oldid=1584745" இலிருந்து மீள்விக்கப்பட்டது