உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

99

காட்டினாள். அவ்விடத்தை உடனே அவ்வரசர் அகழ்விக்க, மிகுதியான இனியநீர் கீழிருந்து சுரந்து மேலே பெருகியது. அதுகண்ட அரசர் பெருங்களிப்புற்று அவ்வம்மைக்குப் பெருஞ்சிறப்புகள் செய்து சமயப் பட்டம் அளித்து உதவிச் சம்பளமும் வழங்கினார்.

அவளது வியத்தகும் ஆற்றலை நேரே கண்டறிந்த அஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் பெரிதும் திகைத்து, அவ்வாற்றலின் உண்மையைத் தெரிதல் வேண்டி, முன்னுள்ளோர் நூல்களை எல்லாம் ஆராயத் துவங்கினர். ஆராய்ந்து கடைசியாக இயற்கைப் பொருள் ஆராய்ச்சியில் பல பெரு நுட்பங்களைக் கண்டறிந்து உலகத்திற்குப் பேருதவி செய்தவராகிய ஊசினர் (Huygens) என்பார் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைத் தெரிந்தெடுத்தனர்.போரிலிருந்து சிறையாகப் பிடித்துக் கொணர்ந்து அந்துவர்ப்பு (Antwerp) நகரின் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர், எவ்வளவு தடிப்பான மட்டிப் பொருள்களையும் உற்றுநோக்கி, அவை செந்நிறம் வாய்ந்திலவாயின், அவற்றால் மறைக்கப்பட்ட பண்ட களைத் தெளிவாகக் கண்டறிந்துரைக்கும் அறிவாற்றல் உடையராயிருந்தனர் என்னும் வியக்கத்தக்க வரலாறு அக்கலைஞர் வரைந்த அக்கடிதத்திற் குறிக்கப்பட்டிருந்தது. அதனைத் தெரிந்த பிறகுதான் அவ்வியற் பொருளறிஞர் உள்ளம் அமைதியுற்றது.

மேற்சொன்ன போர்த்துகேசிய மாது தமக்குள்ள அவ்வறி வாற்றலைப் பயன்படுத்த நேரும் காலங்களில் எல்லாம் ஏதோர் உணவும் உட்கொள்ளாமல் கடும் பட்டினி கிடப்பர்; ஏனென்றால் தமது வயிற்றில் செரியாக்குணம் சிறிதிருப் பினும் தமக்குள்ள அவ்வியத்தகும் ஆற்றல் மங்கிப் போதலை அவர் நன்குணர்ந்து இருந்தனர்.

எனவே, நுண்ணறிவை வளர்க்க வேண்டும் சிறார்கள் கண்ட கண்ட உணவுப் பண்டங்களை எல்லாம் வேளையும் நேரமும் அறியாமல் உட்கொள்வது எவ்வளவு பிசகானது என்பது இனிது புலப்படுகின்றதன்றோ? ஆதலால், சிறாரும் அவர்தம் பெற்றோரும் உணவுப் பண்டங்களை மிகுதியாக அருந்தாமல் விழிப்பாய் இருத்தலுடன், இடையிடையே பட்டினி கிடக்கவும் பழகுதலைக் கடைப்பிடித்தல் வேண்டு மென்று உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/132&oldid=1584746" இலிருந்து மீள்விக்கப்பட்டது