உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  • மறைமலையம் -18

38. மதிப்பரிய மணிக்கலன்

6

அவன்சுவர்க்கர்' (Abensberg) என்னும் தேயத்துச் சல்வர் ஒருவர் முப்பத்திரண்டு பிள்ளைகளைப் பெற் றெடுத்து அவர்கள் எல்லாரையும் மிக அருமையாக வளர்த்து வந்தனர். ஒருகால் செர்மன் தேய அரசன் தம்முடைய நாடு நகரங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், ஆங்காங்குள்ள சிற்றரசர்களும் அரசியல் தொழிலில் அமர்ந் திருப்பவர்களும் செல்வர்களும் பிறரும் மணிகள் பதித்த பொன்னணிகள் பொற்கலன்கள் பொற்பட்டாடைகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைத் தத்தம் காணிக்கை களாக் கொணர்ந்து வைத்து அரசனை வணங்கி வாழ்த்தினர். ஆனால், அவன்சுவர்க்கரோ அரசன் தம் ஊர்க்கு அணித் தாக வருகையில், தாம் பெற்ற முப்பத்திரண்டு பிள்ளை களையும் அழைத்துக் கொண்டு சென்று, அரசனை வர வேற்று, அரசர்க்கும், தமது நாட்டிற்கும் தாம் செலுத்து தற்குத் தக்க காணிக்கைகள் தம் முப்பத்திரண்டு பிள்ளை களாகிய மதிப்பரிய மணிக்கலன்களே என மொழிந்து, அப்பிள்ளைகள் எல்லாருடனும் அரசனை வணங்கி வாழ்த் தினர். அதுகண்ட அரசன் அவரது உள்ளத்தின் உண்மை யையும் அவர் செலுத்திய காணிக்கைகளின் மதிப்பரிய தன்மையையும் நன்குணர்ந்து வியந்து, அவர்க்கும் அவர் தம் புதல்வர், புதல்வியர்க்கும் பல் பெருஞ்சிறப்புகள் செய்து மகிழ்ந்தான்.

கரு

இங்ஙனமே நிகழ்ந்த மற்றொன்று வருமாறு: நீலியாள்' (Cornelia) என்னும் ஒரு பெருமாட்டியாரைக் காண வந்த மற்றொரு பெருமாட்டி தனக்குள்ள செல்வப் பெருக்கையும் தான் அணிந்திருந்த நகைகளின் விலையுயர்ந்த தன்மையையும் தானாகவே புகழ்ந்து பேசி முடித்த பின்னர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/133&oldid=1584747" இலிருந்து மீள்விக்கப்பட்டது