உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

66

சிறுவர்க்கான செந்தமிழ்

.

101

கருநீலியாளை நோக்கி, "அம்மே, உங்களுக்கு எவ்வளவு செல்வம் உளது? உங்களுக்கு எத்தனை விலையுயர்ந்த நகை கள் உள்ளன?” என்று வினவினாள். அது கேட்ட கரு என்று நீலியாள் தமது இல்லத்தின் பின்கட்டினுள்ளே சென்று தம் பிள்ளைகள் இருவரையும் கொண்டுவந்து அந்த அம்மைக்குக் காட்டி, வர்கள் இருவருமே எனக்கு இரு பெருஞ் செல்வத்திரள்கள்! இவ்விருவருமே எனக்கு மதிப்பரிய மணிக்கலன்கள்!” என மொழிந்தனள். இச்சொற்கேட்ட அந்த அம்மை தனது சல்வத்தின் போலித் தன்மையையும் கருநீலியாளுக்குள்ள செல்வத்தின் உண்மையையும் உணர்ந்து வெட்கிச் செருக்கழிந்து தனது பிழையைப் பொறுக்கும்படி கருநீலியாளை வேண்டினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/134&oldid=1584748" இலிருந்து மீள்விக்கப்பட்டது