உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

103

40. உழைப்பினால் உயர்ந்த ஒரு கதை நூலாசிரியர்

உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் மிகச் சிறந்த நிலையை அடைந்தார் சிலரில் 'திசிரேலியர்' (Disraeli) என்பவரின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கது. இவர் தமது இளமைக்காலந்தொட்டே கல்விகற்பதிலும் தாம் கற்றறிந் தவைகளை நூல்களாக எழுதி வெளியிடுவதிலும் கருத்து அழுந்தி நின்றனர். இவர் முதன்முதல் எழுதி வெளிப்படுத்திய கதைநூல் ஒன்றைப் பார்த்தாரிற் பலர் இவரை ஏளனஞ் செய்து நகையாடியதுமன்றி, இவரை வெறிபிடித்தவர் எனவும் ஏசிப் பேசினர். ஆயினும், அவர்களின் இகழுரை ஏச்சுரைகளைக் கேட்டு இவர் சிறிதும் மனங்கலங்காதவராய்த், தாம் மேற் கொண்ட நூல் இயற்றும் முயற்சியை விடாப்பிடியாய்ச் செய்தே வந்தனர். கடைசியாக இவர் இயற்றி வெளியிட்ட கானிங்குசுபி' (Coningsbuy), 'சிபில்' (Sybil), ‘தான்கிரேடு’ (Tancred) என்னும் கதை நூல்கள் மூன்றும் முதிர்ந்த கதைச் சுவையானும் சொற்சுவையானும் பயில்வார் உள்ளத்தைக் கவர்ந்து அவரைப் பெரிதும் இன்புறுத்தி ஆக்கியோனுக்கும் அழியாப் பெரும்புகழை நிலைபெறுத்தலாயின.

பின்னர், இவர் இலண்டன் மாநகரில் குடிமக்கள் மன்றத்தில் விரிவுரை நிகழ்த்துதற்கு முதன்முதல் தோன்றி நின்றபோது, அங்கிருந்தவரில் பெரும்பாலோர் இவரைக் கண்டு நகையாடிக் கூவிப் பேரிரைச்சல் இட்டதுமன்றி, இவர் பேசிய விரிவுரையின் ஒவ்வோர் அழகிய சொற்றொடரையும் பகடி செய்து கொண்டும் இருந்தனர். ஆனால், இவரோ அத்துணை இழிவுகளையும் மனவமைதியோடு பொறுத்துக் கொண்டு முடிவில் "யான் பலவற்றைப் பலகால் துவங்கியிருக்கின்றேன்; இறுதியில் அவைகளை நன்கு முடித்து நன்மை அடைந் திருக்கின்றேன். இப்பொழுது என் பேச்சை நிறுத்தி அமர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/136&oldid=1584750" இலிருந்து மீள்விக்கப்பட்டது