உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

  • மறைமலையம் -18

விடுகிறேன்; ஆனால், நீங்கள் எனது விரிவுரையை ஆவலோடு கேட்கும் காலம் வரும்" எனக் கூறித் தமது இருக்கையில் அமர்ந்தனர்.

.

வர் கூறியவண்ணமே அக்காலமும் வந்தது. உலகத் தில் மிகச் சிறந்த அறிஞர்கள் ஒருகால் ஒருங்கு குழுமியிருந்த போது அம்மன்றத்தில் இவர் நிகழ்த்திய அரும்பெருஞ் சொற் பொழிவானது அவரெல்லாருள்ளத்தையும் ஒருமிக்கக் கவர்ந்து விட்டது. எல்லாரும் இவருடைய சொல்லாற்றல் ய பொருளாற்றலை மிக வியந்து பேசிப் புகழ்ந்தனர். அதிலிருந்து இவரது புகழ் நாளுக்குநாள் ஓங்கி வளர்ந்து ஒளிர்வதாயிற்று. பின்னர் இவர் பாராளுமன்றத்தில் சிறந்த ஒரு விரிவுரை யாளராய் எல்லாராலும் மேலும்மேலும் கொண்டாடப்பட்டுத் திகழ்ந்தனர்.

த்துணை மேலான நிலையைத் திசிரேலியர் எய்து தற்கு ஏதுவாய் நின்றவை யாவை? இவர்தம் முயற்சியும் மனத்திட்பமும் அல்லவோ? இளைஞரில் பெரும்பாலார் தாம் துவங்கிய ஒரு நன்முயற்சியில் ஒருகால் தவறிவிட்டனராயின் அதனால் மனம் உடைந்து ஒரு மூலையில் போயிருந்து வருந்தி அவிந்து போகின்றனர். மற்றுத் திசிரேலியரோ அத்தகைய இளை ஞரைப்போல் ஒருகாலும் மனம் மடிந்து இருந்தவர் அல்லர். தாம் எடுத்த முயற்சியில் தாம் தவறியது எதனால் என்று ஆராய்ந்து அதற்குக் காரணம் இன்னது என்று கண்டதும், அதனைக் களைந்து தம்மைச் சீர்திருத்திக் கொண்டு வந்ததுடன், தமது சொற்பொழிவைக் கேட்பாரின் அகநிலை புறநிலை களையும் நன்காராய்ந்து தம்மைச் சீர்திருத்திக் காண்டு வந்ததுடன், அந்நிலைகளுக்குத்தகத் தம்மையும் சைவித்துக் கொண்டு வந்தனர். ஒரு நோய் கொண்டவர் அந்நோயின் மூலத்தை நன்காராய்ந்து பார்த்து அதனைக் களைந்தால் அல்லாமல், எவ்வளவுதான் மருந்துகளை உட்கொண்டு வந்தா ராயினும் அந்நோய் நீங்குமோ? அதுபோலவே, ஓர் அரும்பெரு முயற்சியை மேற்கொண்டவர் பிழைபடுதற்குரிய

அதில் தாம் நன்மையடையாமல்

காரணத்தைத் தெரிந்து அதனை விலக்கி னாலன்றி, அவர் அதனைக் கடைபோக முடித்துப் பயன் பெறார். இந்நுட்பத்தை நன்குணர்ந்து அதற்கேற்ப ஒழுகி னமையே திசிரேலியரின் உயர்நிலைக்கு உறுபெருங் கருவியா யிருந்தது. இதனை இளைஞர்கள் தமதுள்ளத்தில் பதித்து நடத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/137&oldid=1584751" இலிருந்து மீள்விக்கப்பட்டது